fbpx
Connect with us

Cinemapettai

ரிலீஸுக்குத் தயாரான 3 படங்கள்.. உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் முன்னணி நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரிலீஸுக்குத் தயாரான 3 படங்கள்.. உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் முன்னணி நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினான கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜொலித்து வருபவர் த்ரிஷா. நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்னைப் பொண்ணு நம்ம த்ரிஷா.

மிஸ்.சென்னை பட்டம் வென்று மாடலிங்கில் பிஸியாக இருந்த த்ரிஷா, கடந்த 1999ம் ஆண்டில் பிரசாந்த் – சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஹீரோயின் தோழியாக தலைகாட்டினார். அதன்பின்னர், மௌனம் பேசியதே, லேசாலேசா என ஹீரோயின் அவதாரம் எடுத்த அவர், தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதர்ஷ ஹீரோயினாக பல ஆண்டுகள் கோலோச்சினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து விட்ட த்ரிஷா, கமர்ஷியல் படங்களைப் போலவே, நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து வந்துள்ளார். இயக்குநர் ப்ரியதர்ஷன் மூலம் கட்டா மிட்டா என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் த்ரிஷா கால் பதித்து விட்டார். விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸ்ஸி, என்னை அறிந்தால் ஹேமானிகா, கொடி ருத்ரா என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பல கேரக்டர்களை த்ரிஷா நம் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார்.

சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்குப் பதிலளித்த த்ரிஷா, தான் சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் போகப்பிடிக்கும் இடம் அமெரிக்காவின் நியூயார்க் என்றும், பெண்கள் மணிக்கணக்கில் ஷாப்பிங் போவார்கள் என்பதால், தனக்கு ஷாப்பிங் பிடிக்காது என்றும் போட்டு உடைத்தார். அதேபோல், திருமணம் குறித்த கேள்விக்கு அவர் மழுப்பலாகவே பதில் சொன்னார். தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு திருமணத்தை நிறுத்தினார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் போலவே தெலுங்கிலும் நம்ம த்ரிஷா முன்னணி நாயகிதான். டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இவர் டூயட் பாடிவிட்டார். டாப் ஸ்டார்கள் பலருடனும் நடித்துவிட்ட நிலையில், இவர் இன்னும் ரஜினியுடன் நடித்ததில்லை. கொடி படத்துக்குப் பின்னர் கொஞ்சம் கேப் விட்ட த்ரிஷா, தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

நயன்தாராவைப் போலவே ஹீரோயின் சப்ஜெட்களில் கவனம் செலுத்திவருகிறார் த்ரிஷா. சோதனை முயற்சியாக நடித்த ‘நாயகி’ ஏமாற்றிவிட்டாலும், ‘மோகினி’ கைகொடுக்கும் என்பதே த்ரிஷாவின் எண்ணம். கடைசியாக வெளிவந்த ‘கொடி’க்குப் பிறகு, மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ வெளியாகவிருக்கிறது. சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’, ‘சதுரங்கவேட்டை 2’, ‘1818’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதில், மோகினி, கர்ஜனை மற்றும் 96 ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். சின்ன கேப்புக்குப் பின்னர், தான் நடித்த 3 படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருப்பதால் த்ரிஷா செம ஹேப்பியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். வி ஆர் வெயிட்டிங் த்ரிஷா!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top