புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரே நேரத்தில் 3 பேரை சமாளிக்கும் தனுஷ்.. விடிய விடிய ஷூட்டிங் தான்

தனுஷ் இயக்குனராக பவர் பாண்டி படத்தை அடுத்து, சமீபத்தில் இவர் நடித்து இயக்கிய படம் ராயன். இப்படத்தில் இவருடன் இணைந்து துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்திருந்தார். சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் நிலவுக்கு என்னடி என் மேல் கோபம். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா, பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேன உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில்தான் ஒரே நேரத்தில் மூன்று நடிகர்களை நடிக்க வைக்க ரொம்ப சிரமப்பட்டாராம் தனுஷ். படம் சீக்கிரம் வெளிவர வேண்டும் என்று விடிய விடிய ஷூட்டிங் நடக்கிறதாம்.

இப்படத்தின் போஸ்டர், பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி திரைக்கு வரவுள்ளது.

இதையடுத்து, தனுஷ் தனது 51 வது படமான குபேராவில் நடித்து வருகிறார். இப்படத்தை வாத்தி படத்தை இயக்கிய சேகர் கமுலா இயக்கி வருகிறார். இப்படத்தில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தேசி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக தகவல் வெளியாகிறது. அதன்படி, தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகி வரும் இப்படம், பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தனுஷ் எழுதி இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யாமேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தை தனுஷே தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தேனி அதன் சுற்று வட்டாரத்தில் நடந்த நிலையில், பாங்காக்கில் அடுத்து ஷூட்டிங் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து பிஸியாகவே இருக்கும் தனுஷ் அடுத்து, போர்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படமும், லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்துவின் புதிய படத்திலும், அடுத்து, அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இம்மூன்று படங்களில் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர்கள் என்பதால் இப்படங்களில் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நிச்சயம் இப்படங்கள் மூன்றும் அடுத்து அவர் இயக்கத்திலும், நடிப்பிலும் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் ராயன் படம் போலவே ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News