புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தயாரிப்பாளராக முதல் படத்தில் தோற்றுப் போன 3 இயக்குனர்.. நெல்சனுக்கும் இதே நிலைமையா.?

Nelson Dilipkumar: பொதுவாக சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் சினிமா துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நடிகர், நடிகை, பாடகர்கள், இயக்குனர்கள் என பலரும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்கள். இதில் சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்தாலும் பலர் தோற்றுப் போய் உள்ளனர்.

அவ்வாறு இயக்குனர்களாக முத்திரை பதித்த மூன்று நபர்கள் தயாரிப்பாளராக தங்களது முதல் படத்தில் தோற்றுப் போய் உள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து வெற்றி படங்களையும் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் கடைசியாக இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்திருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் படுமோசமான தோல்வியை தழுவியது.

தயாரிப்பாளராக தோற்றுப் போன இயக்குனர்கள்

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் தொடங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். இந்த சூழலில் விஜயகுமார் நடிப்பில் உருவான பிளைட் கிளப் என்ற படத்தை லோகேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் நெல்சன் திலீப்குமார். ரஜினிக்கு ஜெயிலர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கவின் நடிப்பில் உருவான பிளடி பக்கர் படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அமரன் படத்தால் இந்த படத்தின் வசூல் பெரிதும் பாதித்திருக்கிறது. இவ்வாறு இயக்குனர்களாக ஜொலித்த அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் தயாரிப்பாளராக முதல் படத்தில் சருக்களை சந்தித்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News