3 டி டெக்னலாஜியில் உருவாகும் தமிழ் ஹாரர் படம் ! டைட்டில் போஸ்டர் உள்ளே ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

3 டி டெக்னலாஜியில் உருவாகும் தமிழ் ஹாரர் படம் ! டைட்டில் போஸ்டர் உள்ளே !

News | செய்திகள்

3 டி டெக்னலாஜியில் உருவாகும் தமிழ் ஹாரர் படம் ! டைட்டில் போஸ்டர் உள்ளே !

பி ஜி முத்தய்யா

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று தான் சொல்ல வேண்டும். பூ, கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். பின்னர் பி ஜி மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தொடங்கி இது வரை மூன்று படங்களையும் தயாரித்துள்ளார். ராஜா மந்திரி, பீச்சாங்கை மற்றும் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனின் மதுரை வீரன். இதில் மதுரை வீரன் படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரும் இவரே.

Shanmuga Pandian, Captain Vijayakanth,  PG Muthaiah

India’s First  Stereoscopic 3D Horror Movie.

இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. “லிசா” என்று தலைப்பு வைத்துள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகவிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். இசை சந்தோஷ் தயாநிதி. எடிட்டிங் கெளதம். இப்படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக உள்ளனர் . இந்த தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய படம் இது தான்.

lisa

இப்படத்தில் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட் பற்றிய விவரம் எதுவும் வரவில்லை. அதே போல ஒளிப்பதிவை முத்தய்யா அவர்களே கவனிப்பாரா என்பதும் தெரியவில்லை.

சினிமாபேட்டை கிசு கிசு

anjali

anjali

இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு டீம் அணுகியது நம் அஞ்சலி அவர்களை தானாம். எனினும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவும் அஞ்சலியின் பெயர் பரிசீலனையில் உள்ளதாம். எனவே அந்த படத்தின் முடிவை பொறுத்தே இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பாரா அல்லது விலகுவாரா என்று தெரியவருமாம். அதுவரை காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top