இறுதி மேடையை அலங்கரிக்க தயாரான 3 போட்டியாளர்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இறுதிப்போட்டி நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதிலும் இந்த டைட்டிலை யார் தட்டி தூக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களில் வின்னர் யார் என்று ரசிகர்கள் முன்கூட்டியே கணிக்கும் படியாக தான் ஒவ்வொரு விஷயமும் நடந்தது. ஆனால் இந்த சீசன் அப்படி கிடையாது.

இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள மூன்று நபர்களில் யார் வேண்டுமானாலும் இந்த பட்டத்தை வெல்லலாம் என்ற ஒரு நிலை தான் இப்போது இருக்கிறது. ஏனென்றால் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவருமே கடுமையான போட்டியாளர்களாக தான் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

Also Read : தளபதியுடன் ரத்த சொந்தமாக போகும் பிக் பாஸ் பிரபலம்.. வாயை பிளக்க வைத்த அசுர வளர்ச்சி

அதனாலேயே இந்த பைனல் நிகழ்ச்சி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த வகையில் ஓட்டு எண்ணிக்கை படி பார்த்தால் அசீமுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. அப்படி பார்த்தால் அவருக்குத்தான் இந்த டைட்டில் கிடைக்க வேண்டும். ஆனால் விஜய் டிவி ஓட்டு எண்ணிக்கை படி இந்த பட்டத்தை அவருக்கு தூக்கி கொடுத்து விடாது என்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

ஏனென்றால் அசீமுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு அவரை வெறுக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவருடைய கோபம், அடாவடியான பேச்சு ஆகியவைதான் அதனாலேயே விக்ரமனுக்கு சத்தம் இல்லாமல் ஆதரவு பெருக ஆரம்பித்தது. அதேபோன்று மக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவினும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்.. அசீமை வீழ்த்த கடுமையாக போராடும் போட்டியாளர்

இதை வைத்து பார்க்கும் பொழுது விக்ரமன், சிவின் இருவரில் ஒருவர்தான் இந்த டைட்டிலை சொந்தம் கொண்டாட போகிறார்கள். அதிலும் விஜய் டிவி சிவினுக்கு இந்த பட்டத்தை கொடுப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இதன் மூலம் விஜய் டிவியின் ஃபாலோவர்ஸ் மற்றும் டிஆர்பி நிச்சயம் எகிறும். அது மட்டுமல்லாமல் திருநங்கை இந்த சீசனின் வின்னரானால் விஜய் டிவிக்கு அது இரட்டிப்பு லாபமாக தான் இருக்கும்.

இவ்வாறு ராஜதந்திரத்துடன் அனைத்தையும் செய்யும் விஜய் டிவி இந்த இறுதிப் போட்டியிலும் ஏதாவது ஒரு தில்லுமுல்லு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் விக்ரமன், சிவின் இருவரில் ஒருவர் இந்த போட்டியில் வென்றால் அது மக்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுக்கும். அந்த வகையில் நாளை வெளியாக இருக்கும் இந்த தீர்ப்பு மக்கள் எதிர்பார்த்தபடி இருக்குமா அல்லது விஜய் டிவியின் பிளானாக இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read : மதத்தை வைத்து அசிங்கப்படுத்திடீங்க .. கொந்தளித்த பிக் பாஸ் நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்