நல்ல கதை அமைந்தும் சிவகார்த்திகேயனுக்கு படுதோல்வி அடைந்த 3 படங்கள்.. பட்டையை கிளப்பிய பாட்டுகள்

சில படங்கள் நல்ல கதையம்சம் கொண்டிருந்தும் ஏன் தோல்வி அடைகின்றன என சினிமா வல்லுநர்களுக்கும் தெரியாமல் போய்விடுகிறது. சிறிய படங்கள் அவ்வாறு தயாராகி தோல்வி அடைந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் முன்னணி நாயகர்கள் பலர் நடித்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்தால் , அவ்வாறான கதைக்களத்தில் அடுத்த படங்கள் வெளிவர தடையாகி போகும்.

தொகுப்பளராக தன்னுடைய கலையுலக பயணத்தை தொடங்கி, தற்போது முன்னணி நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக தன்மைகளுடன் தமிழ் சினிமாவின் இளவரசனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களை தவிர்த்து இவர் சில புது முயற்சிகளை கையிலெடுத்து நடித்த மூன்று தோல்வி படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1) மான் கராத்தே – வெறும் காமெடி நாயகனாக வலம் வந்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் நடிக்கும் முனைப்போடு இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் முதலானோர் நடித்திருந்தனர்.

திருக்குமரன் என்பவர் இயக்கததில் பாக்ஸிங் போட்டியை அடிப்படையாக கொண்ட இந்த படம் ஆக்ஷன், காமெடி, பாடல், பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்தும், பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது நல்ல டி.ஆர்.பி’யை இந்த படம் இன்றளவும் பெற்று வருகிறது.

2) காக்கி சட்டை – மான் கராத்தே தோல்வி பின் மீண்டும் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்த போலீஸாக சிவா நடிக்க, எதிர்நீச்சல் படம் மூலம் சிவகார்த்திகேயனை நாயகனாக மக்களிடம் கொண்டு சென்ற இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்க இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. படத்தில் சிவாவின் கதாபாத்திரத்துக்கும், நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தாலும் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை அடையாமல் போனது.

3) ஹீரோ – இரும்பு திரை படத்தின் மூலம் வெற்றிகரமாக அறிமுகமான இயக்குனர் பி.எஸ்.மித்ரன்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷினி ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையாக இந்த படம் உருவாகி வெளியானது. சிவாவின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம், அர்ஜுனின் மாறுபட்ட நடிப்பு, கதைக்களம் என பல நல்ல விமர்சனங்களை இந்த படம் பெற்ற போதிலும், ஏனோ ரசிகர்களை இது பெரிதாக சென்றடையவில்லை. ஆக்ஷன் ஹீரோவாக நடித்த இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு தோல்வி படமாக அமைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்