fbpx
Connect with us

Cinemapettai

சிங்க நடை போடும் அஜித்! தொடர்ந்து மூன்று படம் ரிலீஸ்..

ajith-kumar in hindi

News | செய்திகள்

சிங்க நடை போடும் அஜித்! தொடர்ந்து மூன்று படம் ரிலீஸ்..

தமிழ்நாடு அரசியலில் நடக்கும் கூத்து முடியவே அடுத்த தேர்தல் வரைக்கும் காத்து கொண்டிருக்க வேண்டிருக்கு. ஆனா நம்ம சினிமா துறையில் நடக்கும் கூத்து, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு புது படமும் ரிலீஸ் ஆக முடியல. இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கம் பிரச்சனை என அனைத்திலும் பிரச்சனை கொடி கட்டி பறக்குது. இப்படியே போனால் சரி வராது என திரையரங்க சங்கங்கள் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்துள்ளனர். அதான் ரீ ரிலீஸ்.

இதுவரையில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களை தேர்வு செய்து, வெற்றி மட்டும் இல்லாமல் நல்லா கல்லா கட்டிய படங்களையும் தேர்வு செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். அதில் முதல் ஆளாக அஜித்தை தேர்வு செய்து உள்ளனர். அவரை திரையில் பார்த்து ரொம்பா நாள் ஆயிடுச்சி என அவர் ரசிகர்கள் கடுப்பில் இருக்கும் இந்த சமயத்தில் இந்த நற்செய்தி வந்துள்ளது. ஆமாம் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் என அனைத்து படங்களை ரிலீஸ் செய்து தங்கள் கஷ்டங்களை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர் .

அவர்கள் நினைத்தது போலவே ரசிகர்களும் பல பேர் புக் செய்து வந்துள்ளனர். ஏற்கனவே இதற்கு முன் வந்த படங்களின் வசூலை பார்த்து கொல்ல லாபம் பார்த்தனர் தியேட்டர் சங்கங்கள். இதுவும் சரியான முடிவுதான் இருந்தாலும் ரசிகர்களின் காசுதான் பார்த்த படங்களுக்கே போகிறது. இதற்கு அடுத்து ஆங்கில படங்களை தமிழில் ரீமேக் செய்து வெளியிட யோசிக்கின்றனர் தியேட்டர் சங்கங்கள். இப்படியே போனால் புது படங்கள் வருவது சந்தேகமே..

இந்த பிளான் கொஞ்சம் வெற்றி அடைந்தால் அடுத்தடுத்து விஜய், ரஜினி, கமல் என அனைவரின் பழைய படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர் தியேட்டர் சங்கங்கள். ஏற்கனவே சிவாஜி கணேசனின் கலர் படமான கர்ணன் அடைந்த வெற்றி இதற்கு உதாரணம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top