எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.

Ajith
Ajith

தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

Keerthi Suresh
Keerthi Suresh

அஜீத் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் நாயகி யார் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது.

அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றாலும் கலவையான விமர்ச்சனங்களை பெற்றது. இதனால் மீண்டும் சிவாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Anushka-Shetty
Anushka-Shetty

அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி அஜீத்தின் அடுத்தப்படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என்று வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி பட்டியலில் இருப்பவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா மற்றும் நடிகை தமன்னா. இவர்களில் யாராவது ஒருவர்தான் அஜீத் நாயகியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

thamanna

அஜித்திற்கு புதிய ஜோடி இருக்கவே சிவா விரும்புகிறாராம். எனவே, கீர்த்தி சுரேஷ் விசுவாசம் படத்தின் நாயகியாக இருக்கலாம் என்று கணிக்கிறார்கள் கோலிவுட் ஜோதிடர்கள்.