சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சுதா கொங்காராவை சுற்றலில் விட்ட 3 நடிகர்கள்.. ஒரு வழியா சிவகார்த்திகேயனுக்கு எதிராக கிளம்பும் சேட்டன்

அமரன் படம் அடித்த ஹிட்டால் சிவகார்த்திகேயன் டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறார். இப்பொழுது எ ஆர் முருகதாஸ் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதன் பின் அவர் சுதா கொங்காராவின் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இப்பொழுது இந்த படத்தின் சூட்டிங் சில காலம் தள்ளிப் போகிறது.

சுதா கொங்காரா இந்த படத்திற்கு ஆர்டிஸ்ட் தேடும் வேலையில் முழுவதுமாக இறங்கி உள்ளார். ஹிந்தி மொழிக்கு எதிரான படம் என்பதால் இதில் பலபேர் நடிக்க தயங்கினார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் இதில் துணிச்சலுடன் களமிறங்க காத்திருக்கிறார். இந்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்திற்காக சுதா கொங்காரா மெனக்கெட்டு வருகிறார்.

இந்த படத்திற்காக ஆரம்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரோ எனக்கு நடிப்பு வேண்டாம் என இதிலிருந்து விலகி விட்டார். அதன் பின்னர் மலையாள நடிகர் நிவின்பாலி இதில் வில்லனாக நடிப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் வெளிவந்தது.

இப்பொழுது நிவின் பாலி இந்த படத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது அதற்கு பதிலாக மலையாள சேட்டன் நடிப்பு ராட்சசன் பகத் பாசில் வில்லனாக நடிக்கப் போகிறார். ஆரம்பத்தில் இந்த படத்தில் அவர்தான் முதலில் கமிட் ஆனவர். டிசம்பர் மாதம் புறநானூறு படம் சூட்டிங் ஆரம்பிக்கும் யோசனையில் இருந்து வந்தார் சுதா கொங்காரா.

சிவகார்த்திகேயன் இப்பொழுது இருக்கும் பிசியான நேரத்தில் இந்த படம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்க முடியாது என்றும் இது ஓரிரு மாதங்கள் தள்ளிப் போவதாக அறிவிப்பு வெளிவருகிறது. இதனால் பகத் பாசில் கமிட் செய்து வைத்திருந்த படங்களை முடிப்பதற்கு வசதியாக இருந்தது. இப்பொழுது அவரது கால் சீட் பிரச்சினை இல்லாமல் கிடைத்துள்ளது.

- Advertisement -

Trending News