News | செய்திகள்
சென்னையில் 2.0 ஷூட்டிங்-பொதுமக்களுக்கு இடைஞ்சல்-பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்!
ஷங்கரின் 2.0 படக்குழு, சின்ன சின்ன பேட்ச் வொர்க்குக்குகளுக்கான ஷூட்டிங்கை சென்னையில் நடத்தி வருகிறது. இன்று திருவல்லிக்கேணியில் ஷூட்டிங் நடந்தது.
திருவல்லிக்கேணி ஈஸ்வர் தெருவில் குறுகலான பகுதியில் நடைபெற்றுவந்த அந்த ஷூட்டிங்கை கவர் செய்வதற்கு புகைப்பட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் திரண்டு இருந்தனர்.
இதனால் பொதுமக்கள் பெரிய அவதிக்கு உள்ளனர். ஷூட்டிங் செய்து கொண்டிருந்தவர்கள் மீது உள்ள கோபத்தை, அங்கு செய்தி சேகரிக்க சென்று இருந்த பத்திரிகையாளர்கள் மீது சிலர் காண்பித்து தாக்குதல் நடத்தினர்.
அதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு, பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
