36 வயதினிலே படம் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரீ-என்ட்ரி கொடுத்த ஜோ , அந்த படம் பாஸ் ஆஃபிஸில் சரியாக போகாததால் நல்ல கதைக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

பிப்ரவரி26, 2016 அன்று , குற்றம் கடிதல் படத்துக்காக தேசிய விருது பெற்ற டைரக்டர் பிரம்மா, ஜோதிகாவிடம் தனது அடுத்த படத்தின் கதையின் நாயகியாக நடிக்க வேண்டும் என்று அப்ரோச் செய்தார் .முழு கதையையும் கேட்ட சூர்யா தானே இந்தப்படத்தை தயாரிக்கவும் முன் வந்தார்.

பெண்ணின் வாழக்கையை மையம்மாக கொண்ட இப்படத்தில் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் ஜோவின் தோழிகளாக நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில் கடந்த ஏப்ரல் மாதமே இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆனது . அதில் இடம் பெற்ற ‘அடி வாடி திமிரா…’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தை வரும் செப்டம்பர் 15  அன்று ரிலீஸ் செய்ய சூர்யாவின் 2D  என்டர்டெய்ன்மெண்ட் முடிவு செய்து பட ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளது.

சினிமா பேட்டை த்ரோபேக்:

ஏற்கனவே ஜோதிகாவை புல்லட் ஒட்டவைத்தார் இயக்குனர்.பின்பு தோசா சாலேஞ் என்று ட்விட்டரில் வைரல் ஆக்கினார் சூர்யா .

அடுத்து பட ப்ரோமஷனுக்காக என்ன பண்ண போகுது இந்த பட டீம் என்று நாம் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறோம்.