Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

28 வருட அஜித்தின் சினிமா வெற்றிக்கு இதுதான் காரணம்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்

தல அஜித் சினிமா உலகத்திற்கு அடி எடுத்து வைத்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடிய ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை உருவாக்கி, அதனை பல பிரபலங்களின் மூலம் ரிலீஸ் செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். அந்த பிரபலங்களில் பிரசன்னாவும் ஒருவர் அவர் தன் வாழ்க்கையில் அஜித் கடந்து சென்ற முக்கியமான நேரங்களை பதிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

“ஒரு நடிகராக வேண்டும் என்ற எனது கனவை வலுப்படுத்திய ஒரு பெயர்; சுயமாக உருவாக்க எனக்கு கற்றுக் கொடுத்த பெயர்; தோல்விகளுடன் முன்னேற என்னைத் தூண்டிய ஒரு பெயர்; என்னை ஒன்றிணைத்த ஒரு பெயர் அதுவும் கடினமான காலங்கள்; என்னை ஒரு போராளியாக மாற்றும் பெயர் ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை” அவர்தான் அஜித் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ajith-cinemapettai

ajith-cinemapettai

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு நெகடிவ் விமர்சனங்கள் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஆலமரமாக உருவாகி நிற்கிறார் என்றால் அது தல அஜித் மட்டுமே.

இப்படி பலரின் வாழ்க்கையில் தோல்வி அடையும் நேரத்தில் தூக்கிப்பிடிக்கும் தூணாக இருக்கும் அஜித்தின் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
To Top