தமிழில் பரிட்சயம் இல்லை என்றாலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை ஒருவர் இளம் நடிகர் ஒருவருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள செய்தி இருவருக்கும் உண்டான காதல் கிசுகிசுவை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த எம் எஸ் தோனி படத்தின் தமிழ் டப்பிங் மூலம் அறியப்பட்டவர் தான் திஷா பதானி(Disha Patani). அந்த படத்தில் ஒரு அப்பாவி பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதால் இவர் ஒரு குடும்ப குத்து விளக்கு என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்த பிறகுதான் இவர் ஒரு குடும்ப குத்துவிளக்கு நாயகி கிடையாது என்பது தெரியவந்தது. அநியாயத்திற்கு சின்னச்சின்ன உடைகளில் புகைப்படம் வெளியிடுவதுதான் இவரது வேலை.
நீச்சலுடையே மோசமான ஒன்று தான். அந்த நீச்சல் உடையிலும் மோசமான உடையை அணிந்து புகைப்படம் வெளியிடுவதில் அம்மணியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இந்த நடிகைக்கும் ஹிந்தி சினிமாவின் வாரிசு நடிகர் டைகர் ஷெராப் என்பவருடன் காதல் என கிசுகிசு பேசப்பட்டது.

ஆனால் அது வெறும் கிசுகிசு தான் என்பது போல கடந்து சென்றனர். தற்போது டைகர் ஷெராப் மற்றும் திஷா பதானி இருவரும் மாலத்தீவில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளதால் இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு சென்ற முதல் நாளே அநியாயத்திற்கு மோசமான நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் திஷா பதானி.