செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

28 வருடங்களாக தீராத கோபத்தில் இருக்கும் இளையராஜா.. சிஷ்யனை வைத்து பழிவாங்கினாரா மணிரத்தினம்?

தமிழ் சினிமாவை இந்திய அளவில் தலை நிமிர வைத்த இயக்குனர்கள் பட்டியலில் முக்கியமானவர் என்று பார்த்தால் மணிரத்தினம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் உலக அளவில் தமிழ் சினிமா ரசிகர்களை இசையால் மயக்கி வசியம் செய்தவர் தான் இசைஞானி இளையராஜா.

இவர்கள் கூட்டணியில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் மௌனராகம், தளபதி, நாயகன் ஆகிய படங்கள். தளபதி படத்திற்குப் பின் 28 வருட காலமாக இவர்கள் சினிமாவில் ஒன்றாக பயணிக்கவில்லை.

ilayaraja

அது ஏன் என்றால் ரோஜா படத்தின் போது இசைஞானி மற்றும் மணிரத்தினம் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இசைஞானியின் சிஷ்யனான ஏ ஆர் ரஹ்மானை தனது அடுத்த படத்தில் இசையமைக்க வைத்து மிக பிரம்மாண்ட வெற்றியும் பெற்றார் மணிரத்தினம்.

இதனால் மணிரத்தினத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் சிஷ்யனை வைத்து குருவிற்கு பாடம் கற்பித்தவர் என்ற பெயரும் உண்டாம். இசைஞானிக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் ஒரு புறம் இருந்தாலும் கூட அவருக்கு என்று ஒரு கெத்தை எப்போதுமே விடமாட்டாராம்.

இளையராஜாவிற்கும் பிரபல இயக்குனர்களுக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கும். இளையராஜா இசையமைத்த பாடலை இயக்குனர்கள் நிராகரித்தால் அந்த படத்திற்கு அவர் இசை அமைக்க மாட்டேன் என்று தெள்ளத் தெளிவாக சொல்லி விடுவாராம்.

ar-rahman
ar-rahman

இயக்குனர்கள் ஏதாவது பாடல்களுக்கு மறுப்பு தெரிவித்தால் தன்னுடைய தலைக்கணத்தால் அதை ஏற்க கூட மாட்டாராம். திறமை இருக்குமிடத்தில் திமிரு இருக்கும் என்பது தவறில்லை. இரண்டு பெரும் ஜாம்பவான்கள் மோதும்போது இதுபோன்ற பிரச்சினைகள் சினிமாவில் வருவது வாடிக்கை தான் என கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.

இந்த தீராத கோபத்தினால் இளையராஜா தற்போது வரை மணிரத்னத்தின் படத்திற்கு இசையமைக்க வில்லையாம். மணிரத்தினம், ஏ ஆர் ரஹ்மானுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. தற்போது உருவாகிக்கொண்டு இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News