Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் 27 வருடகால சாதனை முறியடிப்பா? வசூல் நிலவரம் உண்மையா?
கடந்த 10ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் ரிலீஸ் ஆனது அதேபோல் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் ரிலீசானது இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஆனால் எந்த படம் முதலிடம் பிடித்திருக்கும் என ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

petta
இந்த இரண்டு படங்களில் பேட்ட திரைப்படம் தான் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது ஆனால் தமிழகத்தில் வசூலில் பேட்ட திரைப்படத்தை ஓரம் கட்டி விஸ்வாசம் தான் முதலிடம் பிடித்துள்ளது தமிழகத்தில் அஜித் கொடிதான் பறக்கிறது.
தமிழில் மட்டும் ரிலீஸ் ஆனா விஸ்வாசம் திரைப்படம் வசூலில் முதலிடத்திலும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆன பேட்ட திரைப்படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்க்கு முன் 1992-ல் ரஜினியின் பாண்டியன் திரைப்படமும் கமலின் தேவர் மகன் திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது ஆனால் பாக்ஸ் ஆபிசில் தேவர் மகன் திரைப்படமே முதலிடம் பிடித்தது, ரஜினியின் பாண்டியன் இரண்டாம் இடத்தையே பிடித்தது.
ஆனால் அதன் பிறகு ரஜினியின் படமே வசூலில் முதலிடம் பிடித்து மாஸ் காட்டி வந்தது ஆனால் 27 வருடத்திற்கு பிறகு ரஜினியின் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி அஜித்தின் விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளது தமிழகத்தில், தான் ஒரு மிகப்பெரிய ஒப்பனிங் நடிகர் என மீண்டும் நிருபித்துவிட்டார்.

viswasam-release
அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இதுவரை சுமார் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாகவும். ரஜினியின் பேட்ட திரைப்படம் சுமார் ரூ.9.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும். தற்போதைய சூழலில் விஸ்வாசம் முன்னணியில் உள்ளது. பொங்கல் முடிந்து 20- ம் தேதிக்குப் பிறகே முழு நிலவரம் தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.
