ஆசை யாரைத்தான் விட்டது. பெண்களும், ஆசையும் உடன் பிறவா சகோதரிகள் என்று கூறலாம். அதிலும், அக்கம்பக்கத்து பெண்கள், நடிகைகளை போன்றவர்களுடன் ஒப்பிட்டு தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளும் செயல்களில் அதிகமான பெண்கள் என்னே? எது? என அறிந்துக் கொள்ளாமல் பலவற்றை பின்பற்றுகின்றனர்.

அப்படி தான் கேட்டி ஜோன்ஸ் என்ற 25 வயது பெண்ணும், ஹாலிவுட் நடிகைகளை போல அழகான மார்பகங்கள் தனக்கு வேண்டும் என இம்பிலான்ட் சர்ஜரி செய்துக் கொண்டார். ஆனால், அதன் விளைவாக இப்போது சதுர வடிவிலான மார்பகங்கள் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்..

ஆங்கில படங்களில் தோன்றும் பெண்களுக்கு இருப்பது போன்றே அழகான, பெரிய மார்பகங்கள் வேண்டும் என்பதற்காக கேட்டி ஜோன்ஸ் எனும் இந்த பெண்மணி இம்பிலான்ட் சர்ஜரி செய்துக் கொண்டார்.

இந்த இம்பிலான்ட் சர்ஜரியில் பல பக்கவிளைவுகள் உள்ளன. ஒரு மாடல் அழகி தொடையில் இம்பிலான்ட் செய்து இடுப்புக்கு கீழே அவரது உடல் அழுகிய நிலைக்கு உண்டானது குறிப்பிடத்தக்கது

பல லட்சங்கள் செலவு செய்து கேட்டி ஜோன்ஸ் தானும் மார்பகங்களுக்கு இம்பிலான்ட் சர்ஜரி செய்துக் கொண்டார். ஆனால், அவர் செலவழித்த அந்த பணமே அவருக்கு வினையாகும் என நொடி பொழுதும் எண்ணி இருக்க மாட்டார்.

எதிர்பாராத விதமாக, இம்பிலான்ட் சர்ஜரி செய்த சில நாட்களில் கேட்டி ஜோன்ஸ் மாற்றங்களை உணர ஆரம்பித்துள்ளார்.

அவரது மார்பக பகுதியில் வைத்து பிளாஸ்டிக் கப்புகள் தற்போது மெல்ல, மெல்ல திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கேட்டி ஜோன்ஸ்-ன் மார்பகம் பார்க்க சதுர வடிவில் மாறியுள்ளது.

தனது மார்பகம் சதுரமாக தெரிவதை மறைக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிராவை அணிந்து வருகிறார் கேட்டி ஜோன்ஸ்.

இது மிகவும் கடினமான வகையில் இருப்பதால், தினமும் நரக வேதனை அனுபவித்து வருகிறார் கேட்டி ஜோன்ஸ்.

மேலும், இப்படி காரியத்தில் ஈடுபட்டு சதுர வடிவில் மார்பகம் மாறியதை அடுத்து கணவரும் தன் மீது ஆர்வம் குறைந்து காணப்படுகிறார் என வருத்தம் தெரிவித்துள்ளார் கேட்டி ஜோன்ஸ்.

இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றும் இதற்கு தாங்கள் எந்த வகையிலும் உதவ முடியாது என்றும் மருத்துவர்கள் கைவிரித்துள்ளதால் கேட்டி ஜோன்ஸ் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

சரி இம்பிலான்ட் செய்த கப்புகளை அகற்றினால் என்ன? மீண்டும் சர்ஜரி செய்தால் என்ன? என்று யோசித்தால், அது கேட்டி ஜோன்ஸ்-ன் மார்பகம் 70 வயது முதியவர் போல மாறிவிடும் என கூறுகின்றனர்.

இப்போது என செய்வதென்று அறியாது, கேட்டி ஜோன்ஸ் மிகவும் துக்கத்தில் இருக்கிறார். பேராசை பெரு நஷ்டம் என்பது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கேட்டி ஜோன்ஸ்.

ஏற்கனவே இது போன்று இம்பிலான்ட் சர்ஜரி செய்து தங்கள் அழகையும் உருவ தோற்றத்தையும் இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.