Connect with us

Cinemapettai

இயக்குனர் ஷங்கரின் ஆளுமையை புரிந்து கொள்ள நாம் அவர் இயக்கிய முதல் ஐந்து படங்கள் பற்றி பார்ப்போம் – 25 Years Of Shankar.

Entertainment | பொழுதுபோக்கு

இயக்குனர் ஷங்கரின் ஆளுமையை புரிந்து கொள்ள நாம் அவர் இயக்கிய முதல் ஐந்து படங்கள் பற்றி பார்ப்போம் – 25 Years Of Shankar.

ஜென்டில்மேன் – இந்த படம் வெளியான பொழுது இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. ஒரு ராபின்ஹுட் வகையான கதைதான். இருந்தாலும் அந்தக் கதையை கொண்டு போன விதத்தில்தான் இயக்குனர் பெரும் வெற்றி பெற்றார். கல்வியைப் பற்றிய படம், நாயகன் பல்வேறு இடங்களில் கொள்ளை அடிப்பார். இதன் ஒவ்வொரு சம்பவமும் பெரும் ஆக்சன் பகுதியாக வரும். மேலும் படத்தின் இசை ஏ ஆர் ரகுமான். அக்காலகட்டத்தில் ஏ ஆர் ரகுமான் ஒரு புது அலையை உருவாக்கி வந்தார். அந்தப் புதிய அலையை தமிழ்நாட்டில் ஒரு படிக்கு மேல் கொண்டு போனதில் பெரும் பங்கு ஷங்கர் அவர்களது படத்துக்கு உண்டு.

வெற்றி பெற்ற பாடல்கள் – சிக்குபுக்கு ரயில், ஒட்டகத்த கட்டிக்கோ….

காதலன் – வழக்கமாக ஷங்கர் ஒரு அதிரடி படம் எடுத்தால் அடுத்ததாக மென்மையான காதல் படமாக எடுப்பார். அப்படி இரண்டாம் படமாக அமைந்தது தான் இந்த காதலன். இந்தப் படத்தின் ஹைலைட் என்று பார்த்தால் பாடல்கள், காதல் வசனங்கள், காட்சியமைப்புகள். ரகுமானோடு ஷங்கர் கைகோர்ந்த இரண்டாவது படம் இது. பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற பாடல்கள் – பேட்ட ராப், ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி, என்னவளே அடி என்னவளே.

இந்தியன் – ஊழலுக்கு எதிரான இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் இயங்கும். அதுவரையில் ஆதிக்க வர்க்கத்தின் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது சண்டை போடுவது போன்ற ஒன்றாக தான் இருக்கும் அதுவரையில் வந்த படங்கள். ஆனால் கடத்திக் கொண்டு போய் கொலை செய்வது கொலை செய்வது எல்லாம் புதிது அதுவும் இந்தப் படத்தில் இருந்துதான் ஆரம்பித்தது.

இந்தப் படத்தின் சிறப்பு என்று பார்த்தோமானால் இந்தியன் தாத்தா, சுதந்திர காலகட்ட காட்சிகள், வர்ம கலை. வர்ம கலை அதற்கு முன்னால் என்.எஸ். கிருஷணனால் காமெடி காட்சி ஒன்றில் பயன் படுத்தபட்டது. அதன் பிறவு இந்த படத்தில் தான் இந்தியன் தாத்தா விரல்களை சுழலட்டி வர்ம கலையை பயன்படுத்தினார்.

இந்த படத்தில் இந்தியன் தாத்தா மற்றும் அவரது மகன் தோன்றும் காட்சிகளை படமாக்கும் பொழுது தான் ஷங்கர் மனதில் அடுத்த படத்திற்கான விதை விதைக்க பட்டது.

வெற்றி பெற்ற பாடல்கள் – பச்சை கிளிகள், டெலிபோன் மணி போல், கப்பலேறி போயாச்சு.

ஜீன்ஸ் – இந்தப் படத்தை ஷங்கர் அவர்கள் வெளியிடும் முன்னர் இது ஒரு இளமை கொண்டாட்டம் என்று தான் சொன்னார். இரண்டு வேட நாயகன், நாயகனது தந்தைக்கும் இரண்டு வேடங்கள், நாயகி ஆக உலக அழகி ஐஸ்வர்யா ராய், 25 ரூபாயில் உலக அதிசயங்களை சுற்றிப்பார்க்க ஒரு வாய்ப்பு.

படம் வெளியாகும் முன்னரே பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் அதுவும் ரகுமானின் பாடல்கள் கேட்க வேண்டுமா. இந்த படத்தின் ஒலிநாடாக்களை அதுவரை இல்லாத வகையில் முன்பதிவு செய்து வாங்கினார்கள் எங்களூரில். இந்த படத்தில் சிறப்பென்றால் எலும்பு கூடு நடனம் தான். இரட்டை வேட குழப்ப நகைச்சுவையில் திரையரங்கமே அதிர்ந்தது. ஷங்கர் சொல்லியடித்த ஹிட் படமிது.

வெற்றி பெற்ற பாடல்கள் – ஏறக்குறைய எல்லா பாடல்களும்.

முதல்வன் – ஒரு நாள் முதல்வர் என்ற விஷயமே அப்பொழுது பெரும் விவாத பொருளாக மாறி ஒருவித எதிர்பார்ப்பை உண்டு பண்ணி, அதை வசூலாக மாற்றியது.

அன்றைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போல் நாயக கதாபாத்திரம் அமைந்திருந்தாக பேச பட்டது.

வெற்றி பெற்ற பாடல்கள் – ஏறக்குறைய எல்லா பாடல்களும்.

– – –

ஏன் ஷங்கரது முதல் ஐந்து படங்கள் என்றால் அது வரையில் அப்படி படமெடுத்தவர்கள் யாருமில்லை. முதல்வன் படம் வெளியான பிறகு அதே மாதிரியான கலவையில் படங்கள் வர தொடங்கி விட்டன.

CREDITS : source facebook . author – விஸ்வநாத் தியாகராஜன் 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top