Connect with us

Cinemapettai

25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

Cinema News | சினிமா செய்திகள்

25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

கவிதாலயா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் ரோஜா. அரவிந்த்சாமி நாயகனாக நடித்த இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படம் மட்டுமின்றி பாடல்களும் சூப்பர் ஹிட்டானதோடு, ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதையடுத்து ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்துக்கு இசையமைத்து தமிழ் நாடு அரசு விருது பெற்ற ரகுமான், மூன்றாவதாக பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்திற்கு இசையமைத்தார். இப்படியாக குறுகிய காலத்தில் தமிழில் முன்னணி இசையமைப்பாளரான அவர், இந்தி, ஆங்கில மொழிப்படங்களுக்கும் இசையமைத்து ஆஸ்கர் விருதுகளும் பெற்றார்.

குறிப்பாக, ரோஜாவிற்கு பிறகு தான் இயக்கிய எல்லா படங்களுக்கும் ஏ.ஆர். ரகுமானையே இசையமைக்க வைத்து வருகிறார் மணிரத்னம். அவரை தனது குருநாதர் என்றே மேடைகளில் கூறி வருகிறார் ரகுமான். அந்த வகையில், ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் என மணிரத்னம் படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரகுமான் தற்போது அவர் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் அப்படம் ஏப்ரல் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. மேலும், ஏ.ஆர். ரகுமான் சினிமாவுக்கு வந்து இது 25வது வருடம் மட்டுமின்றி, மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணிக்கும் இது 25வது வருடமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top