வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சாவின் விளிம்பில் தத்தளிக்கும் நடிகர்.. சல்மான் கான் தலைக்கு 25 லட்சம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல பிஷ்னோய் அமைப்பினர் கடந்த ஜூன் மாதம் சதித்திட்டம் தீட்டினர். இதற்கிடையே, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுகா என்பவர் ஹரியானாவின் பானிபட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையிலேயே ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தலைக்கு 25 லட்சம்

சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானை கொள்வதற்கு சதி திட்டம் தீட்டியதோடு, அவரை கொள்வதற்கு 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார். இவரை கொள்ள, 18 வயதுக்கும் கீழ் இருக்கும் சிறார்களை தேர்வு செய்துள்ளார்.

சல்மான் கானை கொல்வதற்காக துருக்கி நாட்டின் ஜிகானா கைத்துப்பாக்கியை லார்ன்ஸ் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வகை கைத்துப்பாக்கியால்தான் பஞ்சாபின் பிரபல பாடகர் சித்து மூஸேவாலாவையும் லாரன்ஸ் கும்பல் சுட்டுக் கொன்றனர். மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது, இந்த நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பப்பட்ட ஒரு வாட்ஸ்அப் செய்தியில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. “இந்தச் செய்தியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்கவும், லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகைமையை முடிவுக்குக் கொண்டுவரவும் ரூ. 5 கோடி செலுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

இது கண்டிப்பாக அந்த கும்பலாக இருக்க முடியாது. இந்த நேரத்தை பயன்படுத்தி, பணம் பறிக்க முயற்சி செய்யும் கும்பல் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியாக இருந்தாலும், இது என்னடா சல்மான் கானுக்கு வந்த சோதனை என்று தான் தோன்றுகிறது.

- Advertisement -

Trending News