fbpx
Connect with us

Cinemapettai

வடிவேலின் காமெடி போல் இருக்கிறது.! தூர்வாரிய ஏரிகளுக்கு 25 கோடி ஒதுக்கிய முதல்வர்.. அதிர்ச்சியில் சிட்லபாக்கம் மக்கள்

Edappadi Palaniswami

Tamil Nadu | தமிழ் நாடு

வடிவேலின் காமெடி போல் இருக்கிறது.! தூர்வாரிய ஏரிகளுக்கு 25 கோடி ஒதுக்கிய முதல்வர்.. அதிர்ச்சியில் சிட்லபாக்கம் மக்கள்

சிட்லபாக்கம் ஏரியை சமூக ஆர்வலர்கள் மற்றும் அங்குள்ள மக்களை தூர் வாரியது உலகம் அறிந்த விஷயம். ஆனால் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புதிதாக  தூர்வாருவதற்கு என்றே 25 கோடி ஒதுக்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் 110ன் கீழ்  சிட்லபாக்கம் ஏரியை தூர்வார அதற்கென்று 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது அங்குள்ள மக்கள் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை இதுவரை யாரும் முதலமைச்சருக்கு தெரிவிக்க  இல்லையா? அல்லது நாட்டின் மக்கள் மேல் உள்ள ஆர்வக் கோளாறு என்று நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.

அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்கு என்றே பல திட்டங்களை கொண்டு வந்து இந்திய அளவில் உள்ள தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

ஆனால்  ஆளும் மாநில கட்சி மக்களின் வரி பணங்களை எப்படி பிடுங்குவது என்பதில் குறிக்கோளாக இந்த நிகழ்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சிட்லபாக்கம் ஏரியின் குடிநீரைத்தான் குரோம்பேட், அஸ்தினாபுரம் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்க போகிறார்கள், அல்லது இன்று 25 கோடியை தூர்வாரிய மக்களுக்கு பயன்படும் விதமாக பங்களித்து விட்டாள் மிகச்சிறப்பான சம்பவமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top