Connect with us
Cinemapettai

Cinemapettai

24ம் புலிகேசியின் கரண்ட் நியூஸ் தெரியுமா உங்களுக்கு?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

24ம் புலிகேசியின் கரண்ட் நியூஸ் தெரியுமா உங்களுக்கு?

வடிவேலு நடிப்பில் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. சிம்பு தேவன் இயக்கத்தில் ஷங்கரின் S Pictures தயாரிப்பில் இந்த படம் உருவான்கத்து.

தற்போது அதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாக படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. இதில் வடிவேலுவிற்கு ஜோடியாக பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி நடிக்கிறார். வடிவேலு இந்த படத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

தற்போது இந்த படம் குறித்து என்னென்ன தகவல்கள் வெளிவந்துள்ளன என்று பாப்போம்.இந்த படத்தில் வடிவேலுவும் பார்வதியும் சேர்ந்து நடனமாடும் ஒரு பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த படத்திலும் வடிவேலு இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.படத்தின் அடுத்த பாடலுக்கான படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த பாடலில் பல மாயாஜாலங்களை காட்டுவதற்காக பிரத்யேக கிராபிக்ஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றதாம்.பார்வதி தவிர இன்னொரு நடிகையும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பல ஊர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. அதனால் அதன் இரண்டாம் பாகமும் நன்றாக வரும் என்று பெரும் எதிர்பார்போடு காத்திருக்கிறோம். கவுத்துராதப்பா சிம்புதேவா!!!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top