fbpx
Connect with us

T20 போட்டியில் 71 பந்தில் 214 அடித்து நொறுக்கிய ஆப்கான் வீரர்..

News / செய்திகள்

T20 போட்டியில் 71 பந்தில் 214 அடித்து நொறுக்கிய ஆப்கான் வீரர்..

ஆப்கானிஸ்தான் அணி வீரர் சபிகுல்லா உள்ளூர் டி20 போட்டியில் 71 பந்துகளில் 214 ரன்கள்  குவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் கடீஜ் அணியும், சபாகின் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கடீஜ் அணி 20 ஓவர்கள் முடிவில் 351 ரன்களை குவித்தது. அந்த அணியை சேர்ந்த சபிகுல்லா 71 பந்துகளில் 214 ரன்களை விளாசினார்.

இதில் 21 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய சபாகின் அணி கடீஜ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 107 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 244 ரன்கள் வித்தியாசத்தில் சபாகின் அணி தோல்வியடைந்தது.

இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த உள்ளூர் டி20 போட்டியில் 300 ரன்கள் குவிக்கப்பட்டது சாதனையாக இருந்த நிலையில், கடீஸ் அணி அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top