வாஸ்து சாஸ்திரம், ஒருவருடைய சுய மரியாதை, மன உறுதி, கோபம், வீரம் ஆகியவை தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வினை கூறுகிறது.

மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சாஸ்திரம் கூறும் தீர்வு

 

  • ஒரு மனிதனுக்கு கோபம் மிகவும் ஆபத்தானது. எனவே அத்தகைய கோபத்தைக் குறைக்க இரவில் படுக்கும் போது, கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு ஓரத்தில் காப்பர் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்து, தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக்கட்டையை வைத்து தூங்க வேண்டும்.

 

  • மன உறுதி குறைவாக உள்ள பிரச்சனையைப் போக்க, படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் வெள்ளி ஆபரணம் ஏதேனும் ஒன்றை எப்போதும் அணிந்துக் கொள்ள வேண்டும்.

 

  • ஒருவருக்கு தைரியம் அதிகரிக்க, இரவில் படுக்கும் போது, தலையணைக்கு அடியில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வைத்து, வெண்கல பாத்திரத்தில் நீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

 

  • அதிர்ஷ்டம் உங்களை தேடி வர வேண்டுமானால், வெள்ளியால் செய்த மீனை படுக்கும் போது, தலையணைக்கு அடியில் வைத்தோ அல்லது நீர் நிரப்பிய வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தோ உறங்க வேண்டும்.

 

  • 21 நாட்கள் இரவில் படுக்கும் போது, இரும்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதை கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு அருகில் வைப்பதோடு, நீல நிறமுள்ள கல்லை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால், கண் திருஷ்டி விலகும்.

 

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாஸ்திரங்களையும் தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்றி வந்தால், நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.