Connect with us

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

2050ம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்கும் அபாயம்.. மீண்டும் எச்சரிக்கும் ஆய்வுகள்

கார்பன் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் 2050ம் ஆண்டுக்குள் மும்பை, சூரத், சென்னை, கொல்கத்தா நகரங்களின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தற்போது கடலோரப் பகுதிகளில் வாழும் 3.1 கோடி மக்கள் ஆண்டுதோறும் வெள்ள அபாயத்தில் சிக்குகின்றன., இது 2050க்குள் 3.5 கோடி மக்களாகவும், 2100ல் 5.1 கோடி மக்களாக அதிகரிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதேபோல் உலக அளவில் தற்போது சுமார் 25 கோடி மக்கள் ஆண்டுதோறும் வெள்ள அபாயத்தில் சிக்கி வாழ்கின்றனர்.

கிளைமேட் சென்டரின் நிர்வாக செயல் அதிகாரி பெஞ்சமின் எச். ஸ்டிராஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தி வரும் கிளைமேட் சென்டரின் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தான் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.

20ம் நூற்றாண்டில் தற்போதிருக்கும் கடல் மட்டத்தை விட, 11-16 செ.மீ. அல்லது 500 மி.லிட்டர் கோக் பாட்டலின் உயரத்தில் பாதி அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top