செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

2025 கோடைக்கு குதூகலமாய் வரவுள்ள 6 படங்கள்.. அடித்து நொறுக்க போகும் டாப் ஹீரோக்கள்

2025 Release Movies: இந்த வருடம் எதிர்பார்த்த பல படங்கள் வெளியாகி ஓரளவு நல்ல வசூலை பெற்றது. கோட், இந்தியன், அமரன் ஆகிய படங்கள் வெளியான நிலையில் கங்குவா மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் டாப் ஹீரோக்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

2025 இல் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வர இருக்கிறது. அந்த படங்களின் லிஸ்டை இப்போது பார்க்கலாம். இந்த வருடம் தனுஷுக்கு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.

அவருடைய ராயன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் 10ஆம் தேதி இட்லி கடை படம் வெளியாகிறது. அடுத்ததாக வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 44 படம் உருவாக இருக்கிறது.

2025 இல் கோடை விடுமுறையில் வெளியாகும் படங்கள்

இந்த படம் தனுஷின் இட்லி கடை படத்துடன் மோத இருக்கிறது. அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த குட் பேட் அக்லி படம் மே மாதம் வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது எஸ்கே 23. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகிறது. அடுத்ததாக ஜூன் 5ஆம் தேதி கமலின் தக் லைஃப் படம் திரைக்கு வர இருக்கிறது. கமலுக்கு 2024 சிறப்பான ஆண்டாக அமைந்தது.

மேலும் 2025 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் கூலி. ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கோடை விடுமுறையில் பல படங்கள் ரிலீஸ்க்கு வரிசை கட்டி இருக்கிறது.

- Advertisement -

Trending News