2024ல் வெளிவந்த 115 படங்களில் மகுடம் சூட்டிய நான்கே படங்கள்.. உண்மையான வெற்றிக்கனியை ருசித்த சுந்தர் சி

இதுவரை இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி வரை தமிழில் மொத்தம் 115 படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் உண்மையான வெற்றிக் கனியை ருசித்தது சில படங்கள் மட்டும் தான். கமர்சியல் ஹிட், பிளாக்பஸ்டர் கலெக்சன் என படங்கள் வசூலித்தாலும், உண்மையாக வெற்றி பெற்று 50 நாட்களும், 100 கோடிகளும் வசூலித்தது சொற்ப படங்கள் மட்டுமே.

அப்படி மொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடும் வகையில் 4 படங்கள் மட்டுமே பெருமையை பெற்றுள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் தினத்திலிருந்து படங்கள் வெளிவர தொடங்கியது. அந்த மாதத்தில் மட்டும் 16 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 21 என ஒவ்வொரு மாதத்திலும் சீரான இடைவெளியில் படங்கள் வெளிவந்தன. அப்படி இதுவரை மக்கள் மனதில் இடம் பெற்ற படங்கள்.

அயலான்: சிவகார்த்திகேயன் நடிப்பில் 2024 தைப்பொங்கலுக்கு வெளியான படம் அயலான். பண பற்றாக்குறை காரணமாக நான்கு வருடங்கள் தாமதமாக இந்த படம் வெளியானது. ஒட்டுமொத்தமாக 75 கோடிகள் வசூலித்து கமர்சியல் ஹிட்டானது.

உண்மையான வெற்றிக்கனியை ருசித்த சுந்தர் சி

அரண்மனை 4: தரமான கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும்படி சுந்தர் சி கொடுத்த படம் அரண்மனை 4. மொத்தமாக 40 கோடிகளில் உருவாக்கப்பட்ட இந்த படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. ஒரு பக்கம் ஐபிஎல் மறுபக்கம் தேர்தல் என வந்தாலும் இந்த படம் தனி சாதனை செய்தது.

கருடன்: சூரி ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் கருடன். ஏற்கனவே வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக அடி எடுத்து வைத்தார். சசிகுமார், உன்னி முகுந்தன் என பல ஹீரோக்கள் நடித்திருந்தாலும். சொக்கனாக சூரியன் நடிப்பு தனிச்சிறப்பு. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 60 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது.

மகாராஜா: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா 100 கோடிகள் வசூல் செய்தது. தரமான திரை கதையினால் பட்டையை கிளப்பினார் இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் 50 நாட்கள் வரை இந்த படம் ஓடி சாதனை செய்தது.

Next Story

- Advertisement -