Connect with us
Cinemapettai

Cinemapettai

indian-pregnants-2-crore-new-babies-india

India | இந்தியா

வரும் டிசம்பருக்குள் 2 கோடி குழந்தைகள் பிறக்குமாம்.. ஊரடங்கை முழுசா பயன்படுத்திருகாங்களே

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 5409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1547 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் மட்டும் நாலு பேரை பலி கொண்ட சம்பவம் இன்று சென்னையை உலுக்கி உள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க ஐ.நா-வின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் கூறியிருப்பது என்னவென்றால் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 2 கோடிக்கு மேல் குழந்தைகள் பிறக்குமாம்.

இதனால் குழந்தை பிறந்த பின் மற்றும் பிரசவத்திற்கான பராமரிப்பு பாதிக்கப்படும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இதனை அடியோடு அழிக்க முடியும். ஐ.நா சபை கூறி இருப்பது போன்று உலகமெங்கும் 11 கோடி 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப் போகின்றன.

அதில் இந்தியாவில் மட்டுமே கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்த வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் வரை, 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐநாவின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் கணித்துள்ளது.

இதனால் 2021 ஜனவரி மாதத்திற்குள் இந்தியாவில் 2 கோடியே 41 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த எச்சரிக்கையை பணக்கார ஏழை நாடுகள் என்று பாகுபாடு பார்க்காமல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பிரசவ பராமரிப்பு கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஐநாவின் எச்சரித்துள்ளது.

Continue Reading
To Top