இந்த ஆண்டு அதிக டிக்கெட்டுகளை விற்ற 10 படங்கள்.. முன்னணி திரையரங்கம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டதால் முன்னணி நடிகர்களில் படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த வகையில் வெற்றி தியேட்டர் தரவரிசையின் அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்த படங்களை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. விஜய் ரசிகர் மத்தியில் மாஸ்டர் படம் கொண்டாடப்பட்டது.

டாக்டர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், ரெசின் கிங்ஸ்லி, யோகி பாபு, அர்ச்சனா, தீபா என பலர் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை டாக்டர் படம் பெற்றது.

மாநாடு : வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. டைம் லூப் கதை என்றாலும் சிக்கலே இல்லாமல் எளிதாகப் புரியும் வகையில் படத்தின் திரைக்கதை அமைத்திருப்பது மாநாடு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

கர்ணன்: உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் சமீபகாலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் கர்ணன்.
சிறப்பான நடிகர் தேர்வு, நேர்த்தியான திரைக்கதை ஆகியவற்றால் விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பெரும் வெற்றியைப் பெற்றது.

அண்ணாத்த: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் வசூலை வாரி குவித்தது. அண்ணாத்தா படம் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே அதிவேகமாக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையை படைத்தது.

நோ வே ஹோம்: எழுத்தாளர்கள் க்ரிஷ் மெக்கென்னா, எரிக் சோம்மர்ஸ் ஆகியோர் எழுதிய கதைகாளத்துடன் உருவான படம் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இப்படத்தை மார்வெல் மற்றும் சோனி தயாரித்து இருந்தார்கள். இப்படத்தில் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

காட்ஸில்லா வேஸ் காங்:காட்ஸில்லா வேஸ் காங் படத்தில் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், மில்லி பாபி பிரவுன், ரெபேக்கா ஹால், பிரையன் டைரி கேன்றி, ஷுன் ஒகுரி, ஈசா கோன்சலஸ், ஜூலியன் டெனிசன், லான்ஸ் ரெட்டிக், கைல் சாண்ட்லர் மற்றும் டெமியோன் பிச்சிர் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ராட்சச மிருகத்தை காங் உதவியுடன் எப்படி அழிக்கிறார்கள் என்பதை இப்படத்தின் கதை.

அரண்மனை 3: சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1, 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்ஷி அகர்வால், விவேக், மைனா நந்தினி, யோகி பாபு, நளினி என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாக ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சுல்தான்: பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். விவசாயத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சுல்தான் படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

புஷ்பா: சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மரம் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரி குவித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்