fbpx
Connect with us

2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் இவர் தான்.. அணி நிர்வாகம் திட்டவட்டம்!

csk-team

Sports | விளையாட்டு

2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் இவர் தான்.. அணி நிர்வாகம் திட்டவட்டம்!

கடந்த 10 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் ஆடிய சிஎஸ்கே அணி ஒரு வருடம் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது இல்லை.

விளையாடிய அனைத்து தொடர்களிலும் பிளே ஆஃப் சென்ற ஒரே அணி சென்னை அணி தான். இதில் 8 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது மூன்று முறை கோப்பையை கைப்பற்றியது.

ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த தவறுக்கு காரணம் மூத்த வீரர்களை வைத்து இன்னும் ஆடிக் கொண்டிருப்பது என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார்.

மேலும் அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது வருத்தமளிக்கிறது.

ஆனால் நாங்கள் செய்த சாதனையை எந்த அணியும் தற்போதுவரை செய்ததில்லை. ஒரு வருடம் தவறு நடந்துவிட்டால்அடுத்த வருடம் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று இல்லை.

அடுத்த வருடமும் டோனி தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் இல்லாதது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று காசி விஸ்வநாதன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

dhoni-csk

Continue Reading
To Top