Tamil Nadu | தமிழ் நாடு
எம்மாடியோ! புத்தாண்டு மது விற்பனையில் சாதனை.. கோடிகளைக் குவித்த தமிழக அரசு
தமிழகத்தையும் டாஸ்மாக்கையும் பிரிக்க முடியாது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். காரணம், அரசாங்கத்திற்கு லாபகரமான வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் ஒரே வியாபாரம் என்றால் அது மது விற்பனைதான்.
நாளுக்கு நாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகமாகி வருகின்றனர். இதனால் தினமும் டாஸ்மாக் கடைகளில் மட்டுமே கோடிக்கணக்கில் வியாபாரங்கள் நடந்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.
தமிழக அரசு ஒரே வாரத்தில் ரூ 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை அரசியல் வட்டாரங்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 350 கோடி வரை வசூல் நடைபெற்றுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி 100 கோடி வசூல் ஆகியுள்ளதாக என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் டாஸ்மாக் இல்லையேல் தமிழக அரசு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
