Sports | விளையாட்டு
இரக்கமே இல்லாமல் புரட்டிப்போட்ட 2020.. 11 ஆண்டு கால கிரிக்கெட் சாதனையை இழந்த இந்திய அணி கேப்டன்!
உலக கிரிக்கெட் வரலாற்றில் ரன் மெஷின் என அனைவராலும் பாராட்டக்கூடிய வீரர் இந்திய கேப்டன் விராட் கோலி. இவர் 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அதன்பின் தனக்கென ஒரு நிலையான இடத்தை தன் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தக்க வைத்துக் கொண்டார்.
இந்திய அணிக்காக தொடர்ச்சியான பங்களிப்பை அளித்து வரும் இவர் இதுவரை 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 சதங்கள், 60 அரை சதங்கள் உட்பட 12,040 ரன்கள் குவித்துள்ளார்.
ஆண்டிற்கு சுமார் 6-7 சதங்களை அசால்டாக அடிப்பவர் விராத் கோலி. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் ஆற்றல் கொண்ட ஒரே வீரர் அவர் தான் என பலரும் கூறத் துவங்கினர்.
ஒவ்வொரு வருடமும் சதத்தை பதிவு செய்யும் விராட் கோலி 2020ஆம் ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இது கோலியின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த ஆண்டு இந்திய அணி குறைந்த போட்டிகளில் தான் ஆடியது என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த ஆண்டில் விராட் கோலி 22 சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார்.

Virat-Cinemapettai.jpg
நடப்பாண்டில் 9 இன்னிங்ஸில் விளையாடிய கோலி 431 ரன்கள் குவித்துள்ளார். இந்த வருடத்தில் அவர் ஒரு சதம் கூட பதிவு செய்யாததையடுத்து, 11 ஆண்டுகளாகத் தக்க வைத்த பெருமையை விராட் கோலி இழந்துள்ளார்.
