2019 உலக கோப்பையில் தோனி ஆடுவாரா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது இந்த நிலையில் இது தொடர்பான சர்ச்சைக்கு இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம் எஸ் கே பிரசாத் தற்போது பதில் அளித்துள்ளார்.,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அதிரடி வீரர் தோனி தற்போது கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார் இங்கிலாந்து தொடர் ஆசிய கோப்பை ஆகியவற்றில் சரியாக விளையாடாதவிட்டாதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் தோனி.

இந்திய அணியின் மிடில் ஆடர் பிரச்சனை ஏற்கனவே இருந்து வருகிறது, அதனால் தோனி சிறப்பாக ஆட வேண்டிய நேரம் இது ஆனால் தற்பொழுது சொதப்பி வருகிறார் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருட காலத்துக்கும்குறைவாக இருப்பதால் தோனி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

தோனியின் பேட்டிங் மீது விமர்சனம் எழும் போதெல்லாம் தனது அதிரடி ஆட்டத்தால் பதில் கொடுத்துள்ளார் அதேபோல் மீண்டும் விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் தோனியின் அறிவும் அனுபவமும் கண்டிப்பாக நமது டீம்க்கு தேவை, கேப்டனுக்கு தோணி வழங்கும் அறிவுரையும் அனுபவமும் பல இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளது

அதனால் இந்திய அணியின் உலக கோப்பை வரை தோனி விளையாட வேண்டியது மிக அவசியமாகும் முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதேபோல் தோனியின் இடத்தை பிடிக்க ரிஷப் பண்ட்டிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் அதேபோல் உலக கோப்பையில் 2-வது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் இப்போதிலிருந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் உலக கோப்பையில் தோனி ஆடுவாரா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு இது தொடர்பாக பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் யார் என்ற குழப்பம் வேண்டாம் அது கண்டிப்பாக தோனிதான், அதேபோல் இரண்டாவது கட்டுரை உலக கோப்பைக்காக தேர்வு செய்ய வேண்டிய நேரம் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, ரிஷப் பண்ட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.