2019 தமிழில் 100 கோடி வசூல் சாதனை செய்த படங்கள்.. அடேங்கப்பா!

2019ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த படங்கள் என்பது வெகுசிலவே. ஆண்டுக்கு சுமார் ஆயிரத்தை நெருங்கிவிட பட தயாரிப்புகளில் சில படங்களே போட்ட முதலீடை எடுக்கின்றன.

ஒரு வாரம் ஓடுவதே இன்றைக்கு பெரும் சாதனை என்றஅளவாக மாறிப்போனதற்கு காரணம் அதிகப்படியான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது முக்கியமான காரணம். இதன் காரணமாக போதிய தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. இதையெல்லாம் தாண்டி சில படங்கள் 100 கோடியை தாண்டி உள்ளன. அதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

1. பிகில் (300+ கோடி)

விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்ட போதிலும் வசூலில் சக்கை போடு போட்டது.

2. பேட்ட (250+ கோடி)

ரஜினி, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த பேட்ட திரைப்படம் இரண்டே வாரத்தில் பெரும் வசூல் சாதனை படைத்தது. ரஜினி நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்பீடான படு அதேநேரம் முழு நீள சண்டை படத்தில் நடித்திருந்தார்.

3.விஸ்வாசம் (200+ கோடி)

அஜித், நயன்தாரா நடிப்பில் தமிழில் மட்டும் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது விஸ்வாசம் திரைப்படம். 2019ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல தளங்கள் , நிறுவனங்களால் தேர்வு செய்தது விஸ்வாசம் திரைப்படத்தை தான்.

4. நேர்கொண்ட பார்வை (181+ கோடி)

அஜித் குமார், வித்யாபாலன் நடிப்பில் உருவான இந்த படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. வசூலில் பெரும் சாதனை படைத்தது. குறைந்த நாளில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் ஆகும்.

5. அசுரன் (150+ கோடி)

தனுஷ், மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான அசுரன் இந்த ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தனுஷ் நடிப்பில் இதுவரை பல படங்கள் ஹிட் அடித்திருந்தாலும் அத்தனை படங்களையும் தூக்கி சாப்பிடுவிதமாக இந்த படம் அமைந்திருந்தது. வெற்றிமாறன் இந்த படத்தை அற்புதமாக செதுக்கி இருப்பார்.

6. காஞ்சனா 3 (130+ கோடி)

ராகவா லாரன்ஸ் பல பேய் படங்களை எடுத்து மிரட்டி இருக்கிறார். அவரது காஞ்சனா 3 திரைப்படம் காஞ்சனா 2 படம் போலவே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் நல்ல சாதனை படைத்துள்ளது.

7. கைதி(110 கோடி)

கார்த்தி நரேன் நடிப்பில் வெளியான கைதி விமர்சன ரீதியாக மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. அற்புதமான திரைக்கதை, விறுவிறுப்பான கொண்டு செல்லப்பட்ட விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பிகிலுக்கு போட்டிய களம் இறங்கிய இந்தபடம் வசூலில் நல்ல சாதனை படைத்தது.

Leave a Comment