Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல, தலைவரை ஓரங்கட்டிய தளபதி.. பிரபல தியேட்டர் வெளியிட்ட வசூல் விவரம்
தமிழ்சினிமாவில் தற்போது திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் வருட இறுதி என்றால் சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் உள்ள பிரபல திரையரங்குகளில் போட்டி போட்டுக்கொண்டு முதல் 10 படங்களுக்கான அறிக்கை வெளிவிடுவார்கள்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் முக்கிய தியேட்டரான ரோகினி, அந்த லிஸ்டை வெளியிட்டு இருந்தது. அதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் முதல் இடத்தை பிடித்தது அனைவரும் அறிந்ததே.
சென்னையின் மற்றொரு சிறப்பு வாய்ந்த தியேட்டராக கருதப்படுவது குரோம்பேட்டை வெற்றி. இந்த தியேட்டரில் இந்த வருடத்திற்கான டாப் 10 படங்கள் எவை என்பதை தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெற்றி தியேட்டரிலும் பிகில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. எதிர்பாரா வகையில் கோமாளி திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த வருடத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த பட்டியலில் வழக்கம்போல் இடம்பெற்றுள்ளன. சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் என்ஜிகே ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இருந்தும் டாப் 10-ல் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் இடையே சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
#VettriTopTen2019 listing with relative % difference based on audience count#Bigil 100%#Petta 76%#Viswasam 70%#Comali 66%#NKP 65%#Asuran 64%#Kanchana3 62%#TheLionKing 59%#NVP 54%#EndGame 51%
Ex : Can say Bigil has got double the audience of Endgame#VettriStats2019 https://t.co/txS91mNwIj
— Rakesh Gowthaman (@VettriTheatres) December 27, 2019
