India | இந்தியா
2019 ஆம் ஆண்டின் திருப்பதி உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா வசூல் செய்த ஏழுமலையார்
வருடத்திற்கு வருடம் சினிமா படங்களின் வசூல்களை ரசிகர்கள் எந்த அளவு எதிர்பார்ப்புகளோ அதே அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல். வழக்கம்போல் இந்த வருடமும் கடந்த வருடத்தை விட பல கோடிகள் அதிகமாக வசூல் செய்துள்ளது.
உலகத்திலேயே இரண்டாவது பணக்கார கடவுளாக விளங்குபவர் திருப்பதி ஏழுமலையான். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் தவறாமல் வருகின்றனர்.
வருடத்திற்கு ஒருமுறை உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டு செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது. அதில் திருப்பதி ஏழுமலையான் 2019ஆம் ஆண்டு சுமார் 165 கோடி வசூல் செய்துள்ளார்.
2018 ஆம் ஆண்டை விட சுமார் 90 கோடி அதிகம் காணிக்கை வந்துள்ளது. பணமாக மட்டும் இல்லாமல் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற காணிக்கைகளும் கடந்த ஆண்டை விட அதிகமாகவே உள்ளது. மேலும் முடிக்காணிக்கை செலுத்துபவர்களின் எண்ணிக்கை 20% அதிகமாக இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் காட்டேஜ் எனப்படும் தங்கும் விடுதி வசதிகள் மூலம் 83 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. லட்டு பிரசாதங்களின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.