fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

2019-ல் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீரர்கள்.. இந்தியாவில் இடம் பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர்

cricket

Sports | விளையாட்டு

2019-ல் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீரர்கள்.. இந்தியாவில் இடம் பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர்

விளையாட்டுத்துறையில் 2019இல் அதிகமான வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் மூன்று இடத்தை கால்பந்து அணியின் பிரபல வீரர்கள் பெற்றுள்ளனர். அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கால்பந்து போட்டியின் மூலம் மட்டுமல்லாமல் விளம்பரத்தின் மூலம் 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக பெற்றுள்ளார். இப்போது வெளியிட்டுள்ள பட்டியலின் படி மெஸ்ஸி முதல்முறையாக இந்த இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நிகரான கால்பந்து வீரரான போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டினா ரொனால்டோ 109 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானம் ஈட்டி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

மூன்றாவது இடத்தை பிரேசில் அணியை சேர்ந்த நெய்மர் 105 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக இயற்றியுள்ளார். தற்போது முதல் மூன்று இடத்தை வரிசை கட்டி நிற்கும் கால்பந்து வீரர்களுக்கு பின்னர் நான்காவது இடத்தை மெக்சிகோவை சேர்ந்த குத்துச் சண்டை வீரரான சௌல் கேனலோ 94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது பிரபல நிறுவனத்துடன் விளம்பரத்திற்காக 365 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் கிட்டத்தட்ட 93.4 அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டி உள்ளார். இவர் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமாக விளம்பரத்திற்கு மட்டும் 86 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றுள்ளார்.

இந்த 100 பேர் பட்டியலில் முதல் பெண்மணியாக டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளார், 29.2 பில்லியன் அமெரிக்க டாலருடன் 63வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதல் 100 பேர் பட்டியலில் 100வது இடத்தைப் பிடித்துள்ளார். 25 மில்லியன் அமெரிக்க டாலருடன் கடைசி இடத்தை பிடித்துள்ளார், இவர் கிரிக்கெட்டின் மூலம் பெற்றுள்ள வருமானம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்.

ஆனால் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டி உள்ளதால் 100 வது இடத்தை பிடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top