Tamil Cinema News | சினிமா செய்திகள்
2019ல் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
சினிமாவை பொறுத்தவரை மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வரும் படங்களில் சிறிதளவு சொதப்பினாலும் அது பெரிய அளவில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகும். அப்படி 2019ஆம் ஆண்டு எதிர்பார்ப்பில் வெளியாகி கிண்டலடிக்கப்பட்ட படங்கள்:
பிகில்
தளபதி விஜய்யுடன் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கிய திரைப்படம். பிகில் படத்தின் ட்ரெய்லரில் வெளியான பிகிலே என விஜய் கூறுவது விக்ஸ் விளம்பரம் வரை கிண்டலடிக்கப்பட்டது.
மிஸ்டர் லோக்கல்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இனி அவ்வளவுதான் என யோசிக்கும் அளவுக்கு ரசிகர்களை மிகவும் சோதனையாக்கிய திரைப்படம். அதிலும் வாட்ஸ்அப் ப்ரோ, ஃபேஸ்புக் ப்ரோ என்ற காமெடி எல்லாம் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு வேண்டாம் என்கிற அளவுக்கு விமர்சனத்துக்குள்ளக்கியது.
என் ஜி கே
சூர்யாவை விட இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்தவர்கள் செல்வராகவன் ரசிகர்கள் தான். அந்த அளவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் திரைக்கதையில் சஸ்பென்ஸ் என்ற பெயரில் ரசிகர்களை மிகவும் சோதித்து விட்டனர். முதல் காட்சி முடியும் போதே படத்தில் கதையே இல்லை, இந்த படத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்கிற அளவுக்கு விமர்சனம் செய்யப்பட்டது.
சாஹோ
பாகுபலி படங்களின் பிரம்மாண்ட ங்களுக்கு பிறகு 300 கோடி செலவில் உருவான திரைப்படம் தான் சாஹோ. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சப்பை கதையை வைத்து ஒப்பேற்ற முயற்சித்தனர். விடுவார்களா நம்ம ரசிகர்கள், வச்சு ஓட்டியதில் தியேட்டரில் ஒரு வாரம் கூட தாங்கவில்லை இந்த படம்.
காஞ்சனா 3
ஒரே ஒரு பேய் படத்தை வைத்துக்கொண்டு ராகவா லாரன்ஸ் ரசிகர்களைப் படுத்தும் பாடு இருக்கிறதே என தலையில் அடித்துக் கொள்ளாத அளவுக்கு ரசிகர்களை கடுப்பாக்கிய படம் காஞ்சனா 3. ஒரே கதையை வைத்து ஹீரோயின்களை மட்டும் கிளாமராக காட்டி ரசிகர்களை கவர்ந்து விடலாம் என நினைத்துவிட்டார் போல மாஸ்டர். மானத்தைக் கெடுக்கும் அளவுக்கு மட்டமான விமர்சனங்களுக்கு அடிபோனது இந்தப் படம்.
வந்தா ராஜாவா தான் வருவேன்
நீங்க வரவே வேண்டாம் என சிம்புவை சங்கடமாக்கிய திரைப்படம் தான் வந்தா ராஜாவாதான் வருவேன். ஹீரோவுக்கு உடல் அமைப்பு மிகவும் முக்கியம், தொப்பையும் தொந்தியுமாக வந்து ரசிகர்களை சலிக்க வைத்தார் சிம்பு.
தேவ்
ரசிகர்கள் கார்த்தியிடம், தேவ் படம் உங்களுக்கு தேவையா? என்று நேரடியாக கேட்க வைத்தது இந்தப் படம். அட்வென்ச்சர் என்ற பெயரில் தன்னைத் தானே கலாய்த்து கொண்டார் கார்த்தி. இதற்கு மேல் நாங்கள் கலாய்க்க ஒன்றும் இல்லை என ரசிகர்கள் முதல் காட்சியிலேயே எழுந்து ஓடிவிட்டனர்.
90ml
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய மரியாதையை சம்பாதித்த ஓவியா இந்த படத்தின் மூலம் அதற்கு வேட்டு வைத்துக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் பிட்டு படத்தை விட மோசமாக எடுத்து வைத்தது பல விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.
அயோக்யா
ரிலீஸ் தேதிகளில் குளறுபடியால் தள்ளிப்போன அயோக்கிய படம் அப்படியே போயிருந்தால் பரவாயில்லை எனுமளவுக்கு விமர்சனத்தைப் பெற்றது. ரீமேக் படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என ரசிகர்களை கேட்க வைத்த திரைப்படம்.
