Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடுமாறிய பெரிய நடிகைகள்.. தடம்பதித்த புதிய நாயகிகள்.. 2019 ஆம் ஆண்டின் கனவு கன்னி யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் வருடாவருடம் அந்த வருடத்திற்கான கனவுக்கன்னி யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான கனவுக்கன்னி யார் என்பதை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா 2019 ஆம் ஆண்டிற்கான கனவுக்கன்னி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். முன்னணி நடிகர்கள் முதல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் வரை நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஜோதிகா தேர்வு செய்யப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. காரணம் கவர்ச்சி இல்லாமல் கருத்து சொல்லும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு மீண்டும் பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.
‘
மூன்றாவது இடத்தில் அமலாபால் உள்ளார். ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது தான் இவர் மூன்றாவது இடம் பெற்றதற்கு காரணம். விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் எக்கச்சக்க கவர்ச்சிகளை அள்ளித் தெளித்து வருகிறார்.
நான்காவது இடத்தில் அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் இருக்கிறார். முதல் படமே முத்திரைப் பதிக்கும் படமாக அமைந்திருப்பதால் இனி தமிழ் சினிமாவில் மஞ்சு வாரியருக்கு அழுத்தமான கதாபாத்திரங்களை நம்பி தரலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஐந்தாவது இடத்தில் ஆணி அடித்த மாதிரி ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்ந்துள்ளார். கனா என்ற ஒற்றை படத்தின் மூலம் ஒட்டுமொத்த புகழையும் பெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளார்.
முன்னணி நடிகைகளில் நயன்தாரா தவிர தமன்னா, காஜல் அகர்வால் போன்றோர் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
