Connect with us

Cinemapettai

2019-ல் மரணமடைந்த திறமையான பிரபலங்கள்..

2019-died-tamil-cinema

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2019-ல் மரணமடைந்த திறமையான பிரபலங்கள்..

தமிழ் சினிமாவில் தங்களது திறமையான நடிப்பு மற்றும் உழைப்பினை நம்பினால் மட்டுமே வெகு வருடங்களாக இந்த பாதையை கடந்து செல்ல முடியும். அந்த வகையில் தமிழ்சினிமா உடன் நெருக்கமாக பயணித்து கடந்த வருடம் உயிர்நீத்த நடிகர்கள்,  இயக்குனர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

திரையுலகத்தின் பிரபலமானவர்களின் பட்டியலில் இருப்பவர் மகேந்திரன். இவர் திரைத்துறையில் நடிப்பு மற்றும் இயக்கத்தில் புகழ் பெற்றவர். இவர் நடித்த பிரபலமான படங்களில் நிமிர், பேட்ட, சீதக்காதி ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

mahendran

mahendran

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கிரேசி மோகன் தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதில்  இடம் பிடித்தவர். அவர் நடிப்பில் வெளிவந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், அருணாச்சலம், காதலா காதலா ஆகியவை முக்கியமானவை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். உடல்நலக்குறைவால் காலமானார்.

crazy-mohan

crazy-mohan

பாலாசிங்,  வில்லத்தனமான நடிப்பில் பெயர் பெற்றவர் என்றே கூறலாம். இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த என்ஜிகே மற்றும் மகாமுனி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

bala singh

bala singh

ஜே.கே.ரித்தீஷ், அரசியல் மற்றும் சினிமாவில் புகழ் பெற்று விளங்கியவர் என்றே கூறலாம். இவர் நடித்த திரைப்படங்கள் எல்கேஜி மற்றும் நாயகன் ஆகியவை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம். இவர் தனது கட்சி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பினால் உயிரிழந்தார்.

jk rithesh

jk rithesh

கிருஷ்ணமூர்த்தி, தனது இயல்பான நகைச்சுவையால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கைதி. முக்கியமாக வடிவேலுடன் இவர் சேர்ந்து நடித்துள்ள அனைத்து காமெடிகளுமே ரசிகர்களிடையே கைத்தட்டல்களை குவித்தது என்றே கூறலாம். ஒரு திறமையான நடிகனுக்கு ரசிகர்களின் கைதட்டலை பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது

krishna-moorthi

krishna-moorthi

இதுபோன்று  திரைத்துறைக்கு திறமைமிக்க நடிகர்களை இழந்துள்ளோம் என்பது பெரும் துயரம் தான். தற்போது அறிமுக நடிகர்கள் தங்களது திறமையை மட்டும் நம்பி களத்தில் இறங்கியுள்ளனர். தமிழ் சினிமா, இந்திய அளவில் புகழ் பெற்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு திறமைமிக்க நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என்பதில் நமக்கு பெருமை தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top