Connect with us
Cinemapettai

Cinemapettai

kollywood-actors-marriage

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2019ம் ஆண்டில் திருமணம்.. பிரேக்கப்.. செய்த கோலிவுட் நட்சத்திரங்கள்

2019ம் ஆண்டில் கோலிவுட்டில் பல நட்சத்திரங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சிலருக்கு பிரேக்கப் நடந்துள்ளது. அவற்றில் சில முக்கியமானவர்களின் விவரங்களை இப்போது பார்ப்போம்.

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினி காந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 11ம் தேதி திருமணம் சென்னையில் இனிதே நடந்தது.

நடிகர் ஆர்யா, தன்னுடன் கஜினிகாந்த படத்தில் நடித்த நடிகை சாய்ஷாவை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

பகல் நிலவு சீரியலில் நடித்தவர்கள் சயித் அன்வர் சமீரா ஷெரீப் . படப்பிடிப்பில் காதலை வளர்த்து வந்த இந்த காதல் ஜோடிகள் கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலேயே மிகப் மிகப்பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி. இவர்கள் ராஜா ராணி சீரியலில் கார்த்திக் செம்பாவாக வந்தார்கள். ரசிகர்களை கவர்ந்த ஜோடி மன வாழ்க்கையில் இந்த ஆண்டு நுழைந்தது. இவர்களுக்கு முதல் குழந்தை விரைவில் பிறக்க போகிறது.

அரிமா நம்பி, இருமுருகன், நோட்டோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் சங்கர். இவருக்கும் திவாங்கா ஜீவானந்தத்துக்கும ஜலை மாதம் திருமணம் நடந்தது.

உதயம் என்ஹெச் 44 திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஷ்ரியா ஷெட்டி. இவர் தனது காதலனான பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டேவை மும்பையில் டிசம்பர் மாதம் திருணம் செய்தார்.

பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் ஆனவர் வைஷ்ணவி. இவர் தனது பாய் பிரெண்ட் அன்ஜனனை கடந்த ஜுன் மாதம் திருமணம் செசய்து கொண்டார். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர் முன்னாள் ரேடியோ ஜாக்கி விஜய். இவர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி திருமணம் செய்தார். பிப்ரவரி 9ம் தேதி வைத்த ரிசப்சனில் சிவகார்த்திகேயன், ரியோ ராஜ் மற்றும கணேஷ் வெங்கட்ராம் உள்பட பலர் பங்கேற்றனர்.

சமீபத்தில்தான் காமெடி நடிகர் சதீஷ்க்கு திருமணம் நடைபெற்றது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஷால் மற்றும் அனிதா ஆகியோருக்கு இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலன் மைக்கேல் கோர்சலை இந்தஆண்டு தான் பிரேக்கப் செய்து கொண்டார். ஒருவரை ஒருவர் உருக்கமாக காதலித்த இந்த ஜோடி பிரிந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது. இது ஒரு நல்ல அனுபவம் என்று மட்டும் பின்னாளில் ஸ்ருதி சொன்னார்.

நடிகை இலியானா தனது பாய் பிரெண்ட் ஆண்ட்ரோ க்னீபோன் உடன் உள்ள காதலை இந்த ஆண்டுதான் முறித்துக் கொண்டார். இந்த சம்பவம் என் வாழ்கையில் நல்ல அனுபவத்தையே ததந்தது என்றும், தான் இந்த பிரேக்கப் மூலம் இன்னும் மனவலிமை உள்ளவராக மாறிவிட்டதாகவும் இலியானா கூறியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top