தமிழ் சினிமாவில் இந்த வருட புதுப்படங்களில் மூன்றே படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Kalakalappu-2
Kalakalappu-2-

கோலிவுட்டை பொறுத்த வரை வெள்ளிக்கிழமை என்பது தீபாவளி தான். வாராவாரம் சிறு பட்ஜெட் படம் முதல் முன்னணி நடிகர்கள் படம் வரை வெளியாகும் சில வெற்றியை தக்க வைக்கும். சிலவை தோல்வியை அடையும். கதை, திரைக்கதையை பொறுத்து வெற்றி இருக்கும். இதில் முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்பதெல்லாம் இல்லை. ஒரு வருடத்திற்கு 200க்கும் அதிகமான படங்கள் வெளியானால், சொல்லிக் கொள்ள கூடிய வெற்றிய 10 படம் தான் பெறும். இது தான் எல்லா வருடமும் நடக்கிறது. ஆனால், 2018ம் ஆண்டு அரை வருடத்தை தாண்டி இருக்கும் நிலையில், கோலிவுட்டின் நிலை படு மோசமாக இருக்கிறது. இதுவரை வெற்றி பெற்ற பட பட்டியலில் வெறும் 3 படங்களே இணைந்து இருக்கிறது.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகை , தனது ஆர்வக் கோளாறால் சதுரமான மார்பகம் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்!

இப்படத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது, கலகலப்பு 2. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகம். ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படம் தான் 2018ன் வெற்றி பட வரிசையில் முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து, சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து. கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் அடல்ட் காமெடி பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாது திரை பிரபலங்கள் பலரே எதிர்ப்பை பதிவு செய்தனர்.

iruttu-araiyil-murattu-kuthu
iruttu-araiyil-murattu-kuthu

இருந்தும், எதிர்ப்புகளை உடைத்து பல இடங்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் 2018ன் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான படம் இரும்புத்திரை இப்படமும் ஹிட் அடித்து இருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்து இருக்கிறார். சமந்தா, விஷாலுடன் ஜோடி போட்டு இருந்தார். பல நாட்கள் கழித்து ரிலீஸான இப்படம் தொழில் நுட்ப வசதிகளிலின் பின் புலத்தை சொல்வதால் படத்திற்கு நல்ல வரவேற்கு கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  30 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகை...
irumbu thirai

இம்மூன்று படமல்லாமல், மற்ற படங்கள் அனைத்துமே தோல்வியை தான் சந்தித்து இருக்கிறது. இதில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் மட்டும் தப்பி பிழைத்து மட்டும் இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தெலுங்கு டப் படமான நடிகையர் திலகமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.