bollywood

தேடு பொறிகளில் முதன்மையான யாஹூ சமீபத்தில் தனது தளத்தின் மூலம் 2017ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட இந்திய ஹீரோயின்களை பட்டியலிட்டது. அந்த பட்டியலில் இடம் பிடித்த பத்து நடிகைகள் யார் யார், அதில் நம் தன்னிந்திய நடிகைகள் எத்தனை பேர் என்று பார்ப்போம் வாங்க.

இஷா குப்தா:

esha gupta

பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் வடஇந்திய நடிகையான இஷா குப்தா. இவர் தனது சில மோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காரணத்தால் அது பெரும் சர்ச்சையாகி பலரால் எதிர்க்கப்பட்டது. இந்த ஒரு விசயமே அவரை இப்பட்டியலில் பத்தாவது இடத்தினை பெறவைத்துள்ளது.

காவ்யா மாதவன்:

kaviya madhavan

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் இவரது கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக பல செய்திகள் பரவின. அதன் விளைவாய் பலர் இவரை இணையத்தில் தேட தற்போது யாஹூ பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

திஷா பதானி:

disha patani

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள், டைகர் ஷெராப்புடன் இவர் சேர்த்து பேசப்பட்டது, மேலும் கவர்ச்சியாக நடனமாடி இவர் வெளியிடும் வீடியோக்கள் இவைதான் இப்பட்டியலில் இவருக்கு எட்டாம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது.

மம்தா குல்கர்னி:

mamta kulkarni

90s ஹீரோயினான இவரை இந்த வருடம் எல்லோரும் தேடுவதற்கான காரணம் இவரது கணவர் ஒரு போதை பொருள் கும்பலுடன் சேர்ந்து வியாபாரம் செய்ததாகவும் அச்செய்தி வெளியானதால் இவர் குடும்பத்துடன் துபாய் சென்று தலைமறைவாகியதாய் செய்திகள் வந்தன. அதுவே மம்தாவை இப்பட்டியலில் ஏழாம் இடத்தை பெறவைத்துள்ளது.

கரீனா கபூர்:

Kareena Kapoor

இப்பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்திருப்பவர் கரீனா. காரணம் இவருக்கும் சயிப் அலிகானுக்கும் பிறந்த ஆண் குழந்தையே.

தீபிகா படுகோன்:

deepika

தீபிகா இப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. XXX என்னும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம், லீலா பாஞ்சாலி, பத்மாவதி போன்ற படங்களின் சர்ச்சை இவையே இவரை இப்பட்டியலில் ஐந்தாம் இடத்திக்கு கொண்டுவந்துள்ளன.

காத்ரீனா கைப்:

katrina

இந்த வருடம் இன்ஸ்டாகிராமில் இணைந்தது, சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களோடு புகைப்படங்கள் பல எடுத்து வெளியிட்டது, பழைய காதலரான ரன்பீர் கபூருடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, நீண்ட இடைவேளைக்கு பிறகு சல்மானுடன் ஜோடி சேர்ந்தது இவையே காத்ரீனாவை நான்காம் இடத்தை பெறவைத்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்:

aishwarya

கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் வந்ததுதான் இவரை அதிகம் தேட வைத்து மூன்றாம் இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.

பிரியங்கா சோப்ரா:

priyanka chopra

ராக்குடன் ஹாலிவுட் என்ட்ரி, பாலியல் குறித்த சர்ச்சை கருத்துக்கள் இவையே பிரியங்கா சோப்ராவை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.

சன்னி லியோன்:

sunny

முதல் இடத்தில் கவர்ச்சி புயல் சன்னிதான். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தது, அக்குழந்தையின் பிறந்த நாளை டிஸ்னி லாண்டில் கொண்டாடியது, PETA சார்பாக விலங்குகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது இவையே தேடு பட்டியலில் சன்னியை முதல் இடத்திற்கு கொண்டுவந்துள்ளது. சென்ற வருடமும் இப்பட்டியலில் இவர்தான் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக தென்னித்தியாவில் காவ்யா மாதவன் தவிர எந்த நடிகையும் பட்டியலில் இல்லாதது வருத்தமே.

அதிகம் படித்தவை:  சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீயின் ஹட் மற்றும் கியூட் புகைப்படங்கள்.!