கோலிவுட் திரையுலகில் பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்று ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி போன்ற திருநாட்களில் பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளிவரவுள்ளது. எனவே ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அதாவது பொங்கல் திருநாளில் இளையதளபதி விஜய்யின் ‘விஜய் 60’ படம் வெளிவரவுள்ளது. விஜய்யின் முந்தைய படமான ‘தெறி’ மிகப்பெரிய ஹிட்டாகி 100 நாட்கள் ஓடியுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் திரையுலகையே அதிர வைக்க வருகிறார் நமது தல அஜித். படப்பிடிப்பு தொடங்கிய இரண்டாவது நாளே இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை விற்பனை ஆனதில் இருந்தே இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தெரிய வருகின்றது.

மேலும் இதே ஏப்ரலில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்த ”2.0” படத்தின் ரிலீஸ் 2017 தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.