2017-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை “Moon Light” திரைப்படம் தட்டிச் சென்றது.

உலகின் மிக உயரிய சினிமா விருதுகளாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டன. டால்பி தியேட்டரில் இன்று காலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில் ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். 89வது ஆண்டாக வழங்கப்படும் விருது விழாவில் Justin Timbelake உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

எதிர்பார்த்தபடியே, Damien Chazelle இயக்கிய ‘La La Land’ திரைப்படம் ஏராளமான விருதுகளை பெற்றது. 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட La La Land திரைப்படம் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றது.

சிறந்த துணை நடிகருக்கான விருது Moon Light படத்தில் சிறப்பாக நடித்த Mahershala Ali-க்கு வழங்கப்பட்டது. Fences திரைப்படத்தில் ரோஸ் மேக்ஸன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்த Viola Davis-க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதினை Suicide Squad படத்தின் ஒப்பனைக் கலைஞர்கள் குழுவிற்கு ( Alessandro Bertolazzi, Giorgio Gregorini, and Christopher Nelson) வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருது Fantastic Beasts and Where to Find Them படத்தின் ஆடை வடிவமைப்பாளர் Colleen Atwood பெற்றார்.

சிறந்த Sound Editing பிரிவில் Arrival படத்தின் Sound Editor : Sylvain Bellemare பெற்றார். Sound Mixing பிரிவில் Hacksaw Ridge திரைப்படத்தின் இசைக்கலவைக் குழு (Kevin O’Connell, Andy Wright, Robert Mackenzie, and Peter Grace) பெற்றது.
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெர்ஷிய மொழியில் உருவாக்கப்பட்ட ஈரானிய திரைப்படமான The Sales Man தட்டிச் சென்றது. ANIMATED Feature Film-க்கான விருதினை Zootopia படம் பெற்றது. சிறந்த Visual Effects பிரிவில் The Jungle Book திரைப்படம் விருதினை தட்டிச் சென்றது.

3வது படத்திலேயே ஆஸ்கர்:

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை La La Land திரைப்படத்தில் காட்சிகளைக் கொண்டு ஒளி ஓவியம் படைத்த Linus Sandgren பெற்றார். சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதினை “Hacksaw Ridge” படத்திற்காக John Gilbert தட்டிச் சென்றார். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதினை Manchester by the Sea படத்திற்காக Kenneth Lonergan தட்டிச் சென்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதினை Moonlight Black Boys Look Blue நூலை தழுவி “Moon Light” படத்திற்கான திரைக்கதையை உருவாக்கிய Barry Jenkins மற்றும் Tarell Alvin McCraney ஆகியோர் கூட்டாக பெற்றனர். Tarell Alvin McCraney தான் Moonlight Black Boys Look Blue நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. Manchester by the Sea படத்தின் Lee Chandler பாத்திரத்தை கண் முன் உயிரோட்டமாய் நடித்துக் காட்டிய Casey Affleck தட்டிச் சென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை “La La Land” படத்தில் சிறப்பாக நடித்து அசத்திய Emma Stone பெற்றார்.

ரஹ்மானை போல் இரு ஆஸ்கர்களை அள்ளிய இளம் இசையமைப்பாளர் :

சிறந்த இசையமைப்பாளர் விருதினை La La Land படத்தின் இசையமைப்பாளரான 32 வயது Justin Hurwitz தட்டிச் சென்றார். இதே படத்தில் இடம் பெற்றிருந்த “City of Stars” பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றது. முன்னதாக La La Land இயக்குநர் Damien Chazelle-இன் Guy and Madeline on a Park Bench, Whiplash என்ற இரு படங்களுக்கும் இசையமைத்திருந்தார் Justin Hurwitz. தனது 3வது படத்திலேயே உலகின் உச்சமான இசை விருதினை வென்று அசத்தியுள்ளார். BAFTA, Golden Globe உள்ளிட்ட விருதுகளையும் La La Land திரைப்படத்திற்காக Justin Hurwitz வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதினை La La Land திரைப்பட இயக்குநர் Damien Chazelle தட்டிச் சென்றார். 32 வயதான Damien Chazelle சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெறும் இளம் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படம் குறித்த சர்ச்சை:

2017ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை “La La Land” பெறுவதாக Jimmy Kimmel அறிவித்தார். இதனை அடுத்து, La La Land படக்குழுவினர் விழா மேடையில் உற்சாகத்துடன் விருதினை பெற்றனர். இந்நிலையில், விருது தவறாக La La Land படத்திற்கு வழங்கப்பட்டதாகவும், Moon Light திரைப்படமே சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.