2016 தொடங்கி தற்போது வரை 120 படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நம் தளத்தில் இப்படங்களின் வசூல் விவரங்களை பார்த்து வருகிறோம்.தற்போது இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய படங்கள் எது என்று பார்ப்போம்.

முதல் இடத்தில் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் தெறி ரூ 11.85 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

சூர்யா நடித்த 24 ரூ 5.40 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருக்க, ரஜினி முருகன் ரூ 4.02 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தடுத்து இடத்தில் தோழா ரூ 3.73 கோடி, ஜங்கிள் புக் ரூ 3.60 கோடி, இறுதிச்சுற்று ரூ 3.40 கோடி, கான்ஜுரிங்-2 ரூ 3.30 கோடி, அரண்மனை-2 ரூ 3.27 கோடி, இது நம்ம ஆளு ரூ 3.10 கோடி, காதலும் கடந்து போகும் ரூ 3.02 கோடி முறையே வசூல் செய்துள்ளது.