இந்த வருடத்தின் அரையாண்டு முடியவுள்ளது. இந்நிலையில் அதற்குள் 100க்கும் அதிகமான படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த வெற்றி, தோல்வி படங்கள் குறித்து ஒரு சர்வே வெளியிட்டுள்ளது.

இதில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்த படங்கள் என தெறி, ரஜினிமுருகன், பிச்சைக்காரன், தோழா, இது நம்ம ஆளு, இறுதிச்சுற்று, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சேதுபதி, மிருதன், மருது ஆகிய படங்களை குறிப்பிட்டுள்ளனர்.அதேபோல் நல்ல விமர்சனம் வந்து சுமாரான லாபம் தந்த படங்கள், போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை, தோல்வி என சில படங்களை கூறிப்பிட்டுள்ளனர். இதில் 24, பெங்களூர் நாட்கள், காதலும் கடந்து போகும், இறைவி, மனிதன், விசாரணை, உறியடி, ஒரு நாள் கூத்து, ஆறாது சினம், ஜீரோ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.