2015 தமிழ் சினிமாவில் கலக்கிய ஹீரோக்களில் வசனங்கள்

Tamil-Actorsதமிழ் சினிமாவில் பன்ச் வசனங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. இந்த பன்ச் வசனங்களால் நாட்டையே பிடித்தவர்கள் பலர். ஆனால், தற்போது ட்ரண்டே வேறு. யாராவது எப்போது வாய் திறப்பார்கள், அதையே வைத்து ஆயிரம் மிமிக்களை உருவாக்கி கலாய்த்து எடுத்து விடுவார்கள். அந்த வகையில் கடந்த வருடம் மக்கள் மனதில் பதிந்த வசனங்களின் தொகுப்பு இதோ..

அதுக்கும் மேல

ஒரு மனுஷனால இதுக்கு மேல நடிக்கவே முடியாது என்று சொல்ல வைத்த படம் தான் ஐ. இப்படத்தில் விக்ரம் ‘அதுக்கு மேல’ என்று கூறும் போது தான் தியேட்டரில் விசில் பறந்தது. ஆனால்ம் இதையே வைத்து 10 எண்றதுக்குள்ள சுமாரா என்று யாராது கேட்டால், அதுக்கு மேல என்று விக்ரமையே கலாய்த்தனர் ரசிகர்கள்.

விர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாதுடீ

படம் நன்றாக இல்லை, இது மாதிரி படங்களை எல்லாம் இனி ரிலிஸ் செய்யவே கூடாது என எல்லோரும் பேசினாலும், தலையில் துண்டு போட்டாவது தியேட்டரில் இடம்பிடித்து பலரும் பார்த்த படம் தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இப்படத்தில் வரும் விர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாதுடீ என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் இளைஞர்களிடம் மட்டும் பேமஸ் ஆனது.

பாசத்துக்கு முன்னாடி தான் பனி, பகைக்கு முன்னாடி புலி

இளைய தளபதி விஜய் என்றாலே பன்ச் வசனம் அனல் பறக்கும், எப்போதும் இவரின் டயலாக் டெலிவரிக்கே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும், அப்படி நினைத்து தான் புலி படத்தின் ட்ரைலரை ஆவலுடன் காத்திருக்க, ட்ரைலர் முடியும் தருவாயில் பாசத்துக்கு முன்னாடி தான் பனி, பகைக்கு முன்னாடி புலி என விஜய் பேசும் ஒரு வசனம் வரும். என்னம்மா இதெல்லாம் ஒரு பன்சம்மா என்று கடையில் அவரையும் கலாய்த்து விட்டனர்.

தெறிக்க விடலாமாதல

அஜித் அது என்று சொன்னாலே அது பன்ச் தான், அப்படியிருக்க, வேதாளம் படத்தில் தெறிக்க விடலாமா என்று கேட்கும் போது திரையரங்கமே அதிர்ந்தது. ஆனால், இதை படம் வருவதற்கு முன் எதை வைத்து கிண்டல் செய்தார்கள் என்று சொல்ல கூட முடியாத சென்ஸார் அது.

செஞ்சுருவேன்

தனுஷ் லோக்கல் டானாக களம் இறங்கிய படம் தான் மாரி, தனுஷ் ரசிகர்கள் மட்டும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர், இதில் தனுஷ் செஞ்சுருவேன் என்று சொல்வது குழந்தைகள் வரை ரீச் ஆனது. ஆனால், மொத்தம்மா செஞ்சிட்டீங்களே தனுஷ் என ரசிகர்கள் படத்தை கலாய்த்தது தனிக்கதை.
இதுப்போல் உங்களை மிகவும் கவர்ந்த அல்லது கலாய்த்த வசனங்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

Comments

comments