fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் டிசம்பர் 15க்குள் துவங்கப்படும்.. தமிழக முதல்வரின் அசத்தலான அறிவிப்பு

edappadi-k-palaniswami-2

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் டிசம்பர் 15க்குள் துவங்கப்படும்.. தமிழக முதல்வரின் அசத்தலான அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே தமிழக முதல்வர் வெளியிட்டாலும், தற்போது அது நிறைவேற்றப் படுகிறது என்பது தான் குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் தமிழகம் முழுவதும் துவங்கவுள்ள மினி கிளினிக்குகள் நகர் மற்றும் கிராமப்புறங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சையை அளிக்கும் உள்ளது.

அதிலும் குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான சிறப்பாக சிகிச்சையானது இந்த கிளினிக்குகளின் மூலமாக அளிக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் இந்த கிளினிக்குகள், எங்கு அமைக்கப்படும் எந்த நேரத்தில் செயல்படும் போன்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் சென்னையில் குடிசை மாற்று பகுதி, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி என 200 இடங்களில் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த மினி கிளினிக்குகளில் ஒரு டாக்டரும், நர்சுகளும் பணியாளர்களிடம் இடம்பெறுவர்.

mini-clinic

mini-clinic

எனவே பாமர மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை வழங்க தமிழக முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top