jaya

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கைக்கடிகார ரசிகை. படப்பிடிப்புக்கு வரும்போது தினம் இரண்டு முறை வாட்ச் மாற்றும் பழக்கம் உள்ளவர்.

வாட்ச் என்றால் ஜெ., விற்கு உயிர். எம்.ஜி.ஆர் சில நேரங்களில் ‘கடிகாரப் பைத்தியம்’ என்றே கலாய்ப்பாராம்.

வெளியூர்களில் ஷூட்டிங் நடந்தால் உடனே காரை எடுத்துக் கொண்டு போய் வித்தியாசமான கடிகாரங்களை வாங்கி வந்து விடுவார் என்கிறார்கள்.

குமரிகோட்டம் என்கிற பட ஷூட்டிங். எம்ஜிஆர், ஜெயலலிதா பங்கு பெற்று நடித்த “என்னம்மா ராணி பொன்னான மேனி” என்கிற பாடல் காட்சி சத்யா ஸ்டூடியோவில் நடந்தது.

ஜெயலலிதாவின் மேக்கப் உதவியாளர். அதாவது பணிப்பெண் (இது அவரல்ல) கையில் ஒரு வாட்ச். அதன் விலை வெறும் 200 ரூபாய். ஆனால் அந்த சிவப்புக்  கலர் வாரோடு ஜொலித்தது.

ஜெ.,வின் பார்வையில் பட்டவுடன் மெய் மறந்து போனார். அன்று மதியம் வரை அந்த சாதாரண வாட்ச் அவரை படாதபாடு படுத்தி எடுத்து விட்டது.

மதியம் எம்ஜிஆரின் மேக்கப் ரூமில் இருவருக்கும் உணவு. ஜெ., எம்ஜிஆரிடம் அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

னக்கு அந்த  வாட்ச் வேண்டும் என்று.  நீயே கேளு அம்மு என்று எம்ஜிஆர் கூற. நான் எப்படி கேக்குறது என்றாராம்.

மாலை ஷூட்டிங் முடியும் போது ஜெ., கையில் அந்த பணிப்பெண் கட்டிய வாட்ச். அசந்து போனார் ஜெ., எப்படி..எப்படி..? என்று கேட்டுக் கொண்டே இருக்க எம்ஜிஆர் சிரித்தபடி கார் எறிக் கிளம்பி விட்டாராம்.

அடுத்த நாள் அந்தப் பெண் எம்ஜிஆர் 3000 கொடுத்ததை பிரமிப்பாக கூற ஆடிப் போய் விட்டாராம்.

மூவாயிரம் ரூபாய் என்பது இப்போது மூன்று லட்ச ரூபாய்க்கு சமம்.   வெறும் ரூ.200 மதிப்புள்ள வாட்சை தனக்குப் பிடித்ததால் ரூ.3ஆயிரம் கொடுத்து எம்ஜிஆர் வாங்கிய அந்த வாட்சை ஜெ.,மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். அந்த வாட்ச் கொடநாட்டில் பறி  போய் இருக்குமா..?

காரணம், கொடநாட்டில் வாட்ச்கள் அடங்கிய பெட்டியும் மாயம். கடவுளே..!