ரிலீசுக்கு முன்னரே மாஸ்டர் 200 கோடி பிசினஸ்.. மிரண்டு போன கோலிவுட்.. தளபதி சாதனை

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ரிலீசுக்கு முன்பே 200 கோடி வரை பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர்.

இந்த படத்தின் பாதி ஷூட்டிங் மட்டுமே இதுவரை முடிந்துள்ள நிலையில் அதற்குள் 200 கோடி பிசினஸ் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் 180 கோடி பட்ஜெட்டில் 300 கோடி வசூல் செய்தது.

இப்போது 70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மாஸ்டர் ஆரம்பமே 200 கோடி வசூல் என்பதை கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக தளபதி விஜய்யின் மாஸ்டர் கோடைவிடுமுறைக்கு வெளியாக உள்ளது. அப்போது பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று நம்பலாம்.

Leave a Comment